உலகின் அதிக பணக்காரர்கள் நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு எத்தனையாவது இடம்?

உலகின் அதிக பணக்காரர்கள் நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு எத்தனையாவது இடம்?
wealth
உலகிலேயே அதிக பணக்காரர்கள் வாழும் நாடுகள் குறித்த பட்டியல் ஒன்றை கேப் ஜெமினி என்ற நிறுவனம் கடந்த சில வாரங்களாக எடுத்து வந்த நிலையில் தற்போது அதன் முடிவுகள் வெளியாகியுள்ளது.

இந்த பட்டியலில் இந்தியாவுக்கு 12வது இடம் கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு 11வது இடத்தில் இருந்த இந்தியா இந்த வருடம் ஒரு இடம் பின் தங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆயினும் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு இந்தியாவில் பணக்காரர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு இந்தியாவில் 1.98 லட்சம் பேர் இந்தியாவில் அதிக பணக்காரர்களாக இருந்தனர். ஆனால் இந்த ஆண்டு அந்த எண்ணிக்கை 2 லட்சமாக உயர்ந்துள்ளது.

மேலும் வரும் 2025ம் ஆண்டிற்குள் அதிக சொத்து மதிப்பு கொண்ட தனிநபர்கள் இந்தியாவில் அதிகம் இருப்பார்கள் என 13 சதவீத சர்வதேச வெல்த் மேனேஜர்கள் தெரிவித்துள்ளனர். இந்த பட்டியலில், வட அமெரிக்காவை விட ஆசிய பசிபிக் பகுதி முன்னணியில் வந்திருப்பது இதுவே முதல் முறை. சீனா மற்றும் ஜப்பான் நாடுகளில் பணக்காரர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. 2015-ம் ஆண்டில் ஆசிய பசிபிக் பிராந்தியம் 17.4 டிரில்லியன் டாலர் சொத்து மதிப்பை கொண்டுள்ளது

Asian millionaires now the wealthiest in the world

Leave a Reply