விஜய்யை நெருங்குகிறதா பாஜக?

விஜய்யை நெருங்குகிறதா பாஜக?
vijay 6
நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் தனித்து நின்று ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாத பாஜக, அடுத்த தேர்தலுக்குள் தமிழகத்தில் கட்சியை பலப்படுத்த வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்டு வருகின்றதாம்.

ரஜினி கிட்டத்தட்ட அரசியலில் இருந்து ஒதுங்கிவிட்டதால் தற்போது விஜய்க்கு பாஜக குறி வைத்துள்ளதாகவும் இதன் முதல்படியாகத்தான் விஜய்யின் பி.ஆர்.ஓ பி.டி.செல்வகுமாருக்கு மாநில அறிவுசர் பிரிவின் இணைச்செயலாளர் பதவியை கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. விஜய்யின் அனுமதி இல்லாமல் பி.டி.செல்வகுமார் இந்த பதவியை ஏற்றிருக்க மாட்டார் என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் சமீபத்தில் நடந்த யோகா நிகழ்ச்சியில் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரருக்கு தமிழக பாஜக அழைப்பு விடுத்திருந்தது. அவரும் அந்த அழைப்பை ஏற்று யோகா நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதன்மூலம் பாஜக தலைமை விஜய்யை கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கி வருவதாகவும் அடுத்த சட்டமன்ற தேர்தலுக்குள் விஜய்யை முழுமையாக கட்சியில் இணைத்துவிடுவார்கள் என்றும் கூறப்படுகிறது.

Leave a Reply