இலங்கை-இங்கிலாந்து 3வது ஒருநாள் போட்டி மழையால் பாதிப்பு
இலங்கை அணி தற்போது இங்கிலாந்து சுற்றுப்பயணம் செய்து வருகிறது. ஏற்கனவே நடைபெற்று முடிந்த இரண்டு ஒருநாள் போட்டிகளில் ஒரு போட்டி டையில் முடிந்தது. இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் நேற்று 3வது ஒருநாள் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, இலங்கையை பேட்டிங் செய்ய கேட்டுக்கொண்டது. முதலில் களமிறங்கிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பி|ற்கு 248 ரன்கள் எடுத்தது. மெண்டிஸ் 53 ரன்களும், சண்டிமால் 62 ரன்களும், மாத்யூஸ் 56 ரன்களும் எடுத்தனர்.
வெற்றி பெற 249 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலையில் மழை குறுக்கிட்டதால் இங்கிலாந்து அணி 4 ஓவர்களில் ஒரு விக்கெட்டை இழந்து 16 ரன்கள் எடுத்திருந்தபோது மீண்டும் மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் கைவிடப்பட்டது. மூன்று போட்டிகள் முடிவடைந்திருக்கும் நிலையில் இங்கிலாந்து அணீ 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கின்றது.