300 அடி நீளத்தில் உலகின் மிகப்பெரிய காற்றாடி பிளேடு. டென்மார்க் சாதனை

300 அடி நீளத்தில் உலகின் மிகப்பெரிய காற்றாடி பிளேடு. டென்மார்க் சாதனை
turbine 1
காற்றாலை மின்சாரம் தரும் காற்றாலை காத்தாடிகளின் பிளேடுகள் பொதுவாக அதிகபட்சமாக 40 மீட்டர் வரை மட்டுமே இருக்கும். இதைவிட சிறிய பிளேடுகள்தான் அதிகபட்சமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் உலகிலேயே மிகப்பெரிய காற்றாலை பிளேடு தற்போது உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பிளேடின் 88.4 மீட்டர் என்பது குறிப்பிடத்தக்கது.

சுமார் 300 அடி நீளத்தில் பிரமாண்டமாக இருக்கும் இந்த பிளேடு ஜெர்மனி நாட்டிற்காக டென்மார்க் நாட்டில் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உருவாகும் மின்சாரம் 10,000 வீடுகளுக்கு போதுமானதாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த பிளேடு சுமார் 590 அடி உயர டவரில் பொருத்தப்படவுள்ளது. இந்த காற்றாலை பிளேடு பொருத்தப்படும் பகுதியில் உள்ள சாலைகளை மூடிவிட ஜெர்மனி அரசு உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பிரமாண்டமான காற்றாடி நிறுவப்பட்டவுடன் இதை பார்ப்பதற்காகவே சுற்றுலாப் பயணிகள் குவிய வாய்ப்பு இருப்பதாகவும் இதன்மூலம் ஜெர்மனியின் சுற்றுலாத்துறை வருமானம் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.

turbine 2 turbine 3 turbine 4 turbine 5 turbine 6 turbine 7 turbine 8 turbine

Leave a Reply