சீன பயணத்தை பாதியில் முடித்த அருண்ஜெட்லி. சு.சுவாமி காரணமா?

சீன பயணத்தை பாதியில் முடித்த அருண்ஜெட்லி. சு.சுவாமி காரணமா?

arun jaitleyபாஜகவின் சர்ச்சைக்குரிய தலைவரான சுப்பிரமணியம் சுவாமி அரசின் உயரதிகாரிகளை விமர்சனம் செய்வது மட்டுமின்றி மத்திய நிதியமைச்சர் மற்றும் அவரது துறை அதிகாரிகள் மீதும் கடுமையான விமர்சனத்தை வைத்ததால் அதிருப்தி அடைந்த நிதி அமைச்சர் அருண்ஜெட்லி, சீன பயணத்தை பாதியிலேயே முடித்துவிட்டு நாடு திரும்பினார். இதனால் பாஜக வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சீனாவுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள நிதியமைச்சர் அருண்ஜெட்லி நேற்று சீன நிதியமைச்சர் ஜிவே,வை ஜேட்லி சந்திக்க இருந்தார். ஆனால் நேற்று முன் தினமே சீன நிதியமைச்சர் ஜிவே, தேசிய வளர்ச்சி சீர்திருத்த ஆணைய தலைவர் ஜூஷோஷி, மக்கள் வங்கி ஆளுநர் சூவா ஆகியோர்களை அருண் ஜெட்லி சந்தித்து விட்டு உடனடியாக நாடு திரும்பிவிட்டார்.

தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியம், பொருளாதார விவகாரங்களுக்கான ஆலோசகர் ஷாக்திந்தா தாஸ் ஆகியோரை பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கடுமையாக விமர்ச்ஃஅனம் செய்து பேசியதால், அருண் ஜெட்லி அதிருப்தி அடைந்ததாகவும், இதன் காரணமாகவே அவர் திட்டமிட்ட நாளுக்கு முன்பே நாடு திரும்பியதாகவும் கூறப்படுகிறது.

எனினும் அருண் ஜெட்லி திடீரென தனது பயணத்தை முடித்துக் கொண்டதற்கு, அதிகாரிகள் தரப்பில் இருந்து எந்தவித விளக்கமும் அளிக்கப்படவில்லை.

Leave a Reply