‘கபாலி’யின் மலாய் பதிப்பு ரிலீஸ் திடீர் தள்ளிவைப்பு

‘கபாலி’யின் மலாய் பதிப்பு ரிலீஸ் திடீர் தள்ளிவைப்பு

kabali-malayசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த கபாலி’ திரைப்படம் வரும் ஜூலை 15ஆம் தேதி தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில்உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் இந்த படத்தின் மலாய் பதிப்பின் ரிலீஸ் தேதி மட்டும் ஒரு வாரம் திடீரென தள்ளிபோயுள்ளதாக தயாரிப்பாளர் தரப்பிடம் இருந்து செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது.

இந்த படத்தின் மலாய் பதிப்பு டப்பிங் உள்பட ஒருசில போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் முடிவடையாததால் இந்த தாமதம் என்றும் இந்த படம் மலாய் மொழியில் வரும்  ஜூலை 22ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்றும் கூறப்படுகிறது.

எனினும் மலேசியா உள்பட உலகின் அனைத்து பகுதிகளீலும் ‘கபாலி’ படத்தின் தமிழ்ப்பதிப்பு திட்டமிட்டபடி ஜூலை 15ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

மேலும் கபாலி’ திரைப்படம் மலேசியாவில் சுமார் 480 திரையரங்குகளில் திரையிட திட்டமிடப்பட்டுள்ளதாகவும் திரையரங்குகளின் இந்த எண்ணிக்கை இதுவரை வேறு எந்த வெளிநாட்டு மொழிப்படங்களுக்கும் இருந்ததில்லை என்றும் மலேசிய உரிமை பெற்றுள்ள விநியோகிஸ்தர்கள் தெரிவித்துள்ளனர். இந்த படம் மலேசியாவில் 50 மில்லியன் மலேசிய ரிங்கட் வசூலாகும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இதற்கு முன்னர் எந்திரன் 10 மில்லியன் மலேசிய ரிங்கட்டும், தில்வாலே 15 மில்லியன் மலேசிய ரிங்கட்டும் அதிகபட்சமாக வசூல் செய்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply