முழு நிர்வாணமாக வேலை செய்ய சொன்னாரா பெலாரஸ் அதிபர்?

முழு நிர்வாணமாக வேலை செய்ய சொன்னாரா பெலாரஸ் அதிபர்?

bellarasநிர்வாணமாக வெளியில் நடமாடுவதே சட்டப்படி குற்றம் என்று உலகின் பல நாடுகளில் சட்டம் இருந்து வரும் நிலையில் ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பெலாரஸ் என்ற நாட்டின் அதிபர் மக்கள் அனைவரும் நிர்வாணத்துடன் அலுவலகத்தில் பணிபுரிய வேண்டும் என்று கூறியுள்ளாராம். அவருடைய வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட மக்களில் பலர் நிர்வாணமாகவே அலுவலகத்தில் பணிபுரிவதால் அந்நாட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பெலாரஸ் நாட்டில் தற்போது கடுமையான நிதி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்நாட்டின் நாணயமான ‘ருபிள்’-ன் மதிப்பு பெரும்சரிவை சந்தித்துள்ளது. இதனால், அங்கு கடுமையான பொருளாதார தட்டுப்பாடும், வேலையில்லா திண்டாட்டமும் தலைவிரித்து ஆடுவதால் மக்கள் அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும் என்ற அர்த்தத்தில் ‘பெலாரஸ் நாட்டு மக்கள் அனைவரும் தங்களது ஆடைகளை கழற்றி வைத்துவிட்டு, வியர்வை சிந்த உழைக்க வேண்டும்’ என்று அதிபர் அல்யாக்ஸன்டர் லுகான்ஷேகா சமீபத்தில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த உத்தரவை வேறுவிதமாக புரிந்து கொண்ட பலர், தங்களது பணியிடங்களில் ஆடைகளை எல்லாம் அவிழ்த்துவிட்டு, முழு நிர்வாணமாக வேலை செய்ய தொடங்கி விட்டதாக செய்தி வெளிவந்துள்ளது. மேலும் அவர்கள் நிர்வாணமாக பணிபுரிவதை பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களாக பதிவிட்டு வருகின்றனர். இந்த புகைப்படங்கள் ஐரோப்பிய கண்டத்தையும் கடந்து, ரஷியா, உக்ரைன் வழியாக உலகம் முழுவதும் சமூக வலைத்தளங்களை ஆக்கிரமிக்க தொடங்கியுள்ளது.

Leave a Reply