இன்ஸ்பெக்டர் செய்த தவறுக்கு கைகூப்பி மன்னிப்பு கேட்ட எஸ்.பி.

இன்ஸ்பெக்டர் செய்த தவறுக்கு கைகூப்பி மன்னிப்பு கேட்ட எஸ்.பி.

spசேலத்தில் வினுப்பிரியா என்ற இளம்பெண்ணின் புகைப்படத்தை மார்பிங் செய்து ஆபாசமாக இணையதளத்தில் வெளியிட்ட விவகாரத்தில் வினுப்பிரியா தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் சேலம் மாவட்ட இன்ஸ்பெக்டர் ஒருவர் பொறுப்பின்றி நடந்து கொண்டதால்தான் வினுப்பிரியா தற்கொலை முடிவை எடுத்துள்ளதாக அவருடைய பெற்றோர் குற்றம் சாட்டினர். பெற்றோர் தரப்பின் நியாயத்தை புரிந்து கொண்ட சேலம் எஸ்.பி. சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது கடும் நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் செய்த தவறுக்கு தான் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் கூறியதால் இந்த பிரச்சனை சுமூகமாக முடிந்துள்ளது.

மகளின் உடலை வாங்க முடியாது என்று போராட்டம் செய்த பெற்றோர்கள் சேலம் எஸ்பி அமித்குமார் சிங்கின் உறுதிமொழியை ஏற்றுக் கொண்டு உடலை வாங்கி இறுதிச்சடங்கை செய்துள்ளனர்.

இதுகுறித்து சேலம் எஸ்பி அமித்குமார் சிங் செய்தியாளர்களிடம் கூறியபோது “வினுப்பிரியா விவகாரத்தில் குற்றவாளியை பிடிக்கும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். பெண்கள் பாதிப்பு குறித்த புகாரை எப்படி கையாள்வது என்பது தொடர்பாக காவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட இருக்கிறது” என்று தெரிவித்தார்.

Leave a Reply