சுவாதி பிரச்சனையில் ஜாதியை இழுத்து சர்ச்சையில் சிக்கிய ஒய்.ஜி.மகேந்திரன்.

சுவாதி பிரச்சனையில் ஜாதியை இழுத்து சர்ச்சையில் சிக்கிய ஒய்.ஜி.மகேந்திரன்.

8241கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் பட்டப்பகலில் சுவாதி என்ற பெண் ஐடி ஊழியர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தால் காவல்துறையினர் பெரும் டென்ஷனில் உள்ளனர். ஒருபக்கம் அரசின் நெருக்கடியும், இன்னொரு பக்கம் நீதிமன்றத்தின் கண்டனைத்தையும் பெற்றுள்ள காவல்துறையினர் கொலையாளியை பிடிக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் சுவாதி குறித்து நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் சர்ச்சைக்குள்ளான கருத்து ஒன்றை தனது ஃபேஸ்புக்கில் தெரிவித்துள்ளார். கொலையான சுவாதி பிராமண இனத்தை சேர்ந்த பெண் என்பதால் திராவிடக் கட்சிகள் உள்பட அனைத்து அரசியல் கட்சிகளும் ஆர்வம் காட்டவில்லை என்றும், இதுவே ஒரு தலித் பெண் என்றால் அனைத்து கட்சிகளும் வரிந்து கட்டி கொண்டு போராட்டம் நடத்தியிருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த கொலையை செய்தது பிலால் என்ற முஸ்லீம் என்று கூறப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஒய்.ஜி.மகேந்திரனின் இந்த கருத்துக்கு அரசியல் கட்சிகளும், முஸ்லீம் அமைப்புகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கொலையாளி யார் என்பதை இன்னும் காவல்துறையே அதிகாரபூர்வமாக அறிவிக்காத நிலையில் ஒய்.ஜி.மகேந்திரன் ஒரு குறிப்பிட்ட மதத்தை சேர்ந்தவர்தான் கொலையாளி என்று எப்படி கூறலாம் என்றும் இந்த பிரச்சனையில் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் அரசியல் கட்சிகள் மீது அவர் தேவையில்லாத கருத்தை கூறியுள்ளதாக பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ஒய்.ஜி.மகேந்திரன் தற்போது அந்த சர்ச்சைக்குரிய பதிவை தனது ஃபேஸ்புக்கில் இருந்து நீக்கிவிட்டு தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்துள்ளார்.

Leave a Reply