தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு கல்வித் துறைச் செயலர் எச்சரிக்கை

தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு கல்வித் துறைச் செயலர் எச்சரிக்கை

collegeசென்டாக் ஒதுக்கீட்டின் கீழ் முதலாம் ஆண்டு எம்பிபிஎஸ் பாடப்பிரிவில் சேரும் மாணவர்களிடம் முழுக் கல்வி கட்டணத்தை செலுத்துமாறு தனியார் மருத்துவக் கல்லூரிகள் வற்புறுத்தக் கூடாது என கல்வித் துறைச் செயலர் ராகேஷ் சந்திரா எச்சரித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது: எம்பிபிஎஸ் முதலாம் ஆண்டு சேர்க்கை சென்டாக் மூலம் நடந்து வருகிறது. இதற்கான சேர்க்கை ஆணைகளும் மாணவ, மாணவியருக்கு வழங்கப்பட்டு தொடர்புடைய கல்லூரிகளில் சேருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எனினும் முதலாம் ஆண்டு கல்விக் கட்டணத்தை மருத்துவக் கல்லூரிகள் முழுமையாக செலுத்துமாறு வற்புறுத்துவர் என மாணவர்கள், பெற்றோர் தரப்பில் இருந்து முதல்வர் நாராயணசாமியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

புதுவை மாநில அரசு, உயர்கல்வித் துறை மூலம் சென்டாக் ஒதுக்கீட்டில் சேரும் மாணவ மாணவியருக்கு முதலாம் ஆண்டு கல்விக் கட்டணத்தை பெருந்தலைவர் காமராஜர் கல்வி உதவித் தொகை திட்டத்தின் கீழ் தொடர்புடைய மருத்துவக் கல்லூரிகளுக்கு நேரடியாக வழங்கி விடும்.

எனவே அந்த மாணவர்களிடம் மருத்துவக் கல்லூரிகள் கல்வி உதவித் தொகையை முன்னரே செலுத்துமாறு வற்புறுத்தக்கூடாது.

சேர்க்கப்பட்ட மாணவர்கள் விவரம், உயர்கல்வித் துறை இயக்ககம் மூலம் அனுப்பப்பட்டு, அவர்களின் முதலாம் ஆண்டு கல்விக் கட்டணம் ஒதுக்கப்படும்.

எனவே அனைத்து மருத்துவக் கல்லூரிகளும், இந்த வழிகாட்டுதலை கண்டிப்பாக பின்பற்றி, மாணவர்களிடம் முழுக் கல்விக் கட்டணத்தை செலுத்தும்படி கூறப்படும் புகார்கள் எழாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.

இல்லையென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் ராகேஷ் சந்திரா.

Leave a Reply