11 வயது சிறுமியை திருமணம் செய்த பாஜக தலைவரின் மகன். பெரும் பரபரப்பு

11 வயது சிறுமியை திருமணம் செய்த பாஜக தலைவரின் மகன். பெரும் பரபரப்பு

marriageகுழந்தை திருமண முறையை ஒழிக்க வேண்டும் என்று நாடு முழுவதும் மத்திய மாநில அரசுகள் பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். குறிப்பாக மோடி தலைமையிலான ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து குழந்தை திருமணம் பெருமளவு குறைந்திருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பாஜகவின் முக்கிய தலைவர் ஒருவரே தனது மகனுக்கு 11 வயது சிறுமியை திருமணம் செய்து வைத்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்க்கண்ட் மாநில பா.ஜ.க தலைவராக இருந்து வரும் தாலா மராண்டி என்பவரது மகன் முன்னா மராண்டி, 11 வயது சிறுமியை சமீபத்தில் திருமணம் செய்ததாக சமூக வலைத்தளத்தில் தகவல் வெளியானது. ஜூன் 27ஆம் தேதி தாலா மராண்டி மகன் முன்னா மராண்டிக்கும், 11 வயது அப்பாவி சிறுமிக்கும் திருமணம் நடந்ததாகவும், நேற்று முன்தினம் திருமண வரவேற்பு நடந்ததாக கூறப்படுகிறது. இந்த திருமணம் அழைப்பிதழ் அடித்தே நடந்துள்ளதாகவும் இதனால் தாலா மராண்டி மீதும், முன்னா மீதும் உடன் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதனிடையே தன்னை திருமணம் செய்து கொள்வதாக வாக்களித்து, இரண்டு ஆண்டுகளாக பலாத்காரம் செய்து வந்ததாக, முன்னா மராண்டி மீது, மாநில பெண்கள் கமிஷனிடம், மற்றொரு பெண், புகார் அளித்துள்ளார். இந்த இரண்டு விவகாரங்களும், ஜார்க்கண்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்த புகார் குறித்து விசாரித்து வருவதாக, ஜார்க்கண்ட் மாநில பெண்கள் கமிஷன் தெரிவித்து உள்ளது.

Leave a Reply