அதிகார பகிர்வில் பிரச்சனை. சுப்ரீம் கோர்ட்டை நாடிய டெல்லி முதல்வர்

அதிகார பகிர்வில் பிரச்சனை. சுப்ரீம் கோர்ட்டை நாடிய டெல்லி முதல்வர்

arvind kejriwal became a delhi chief ministerடெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் துணை நிலை ஆளுனர் நஜீன் ஜங் அவர்களுக்கும் இடையே பனிப்போர் நடந்து வரும் நிலையில் அதிகாரிகள் நியமனம் செய்வதில் டெல்லி அரசுக்கும் மத்திய அரசுக்கும் கடும் சர்ச்சை ஏற்பட்டு வருகிறது. டெல்லி அரசு எடுக்கும் முடிவுகள், நடவடிக்கைகளை ஆளுநர் நஜீப் ஜங் ரத்து செய்து வந்தார். இதுக்குறித்த வழக்குகளில் டெல்லி ஐகோர்ட்டும் தீர்ப்புகளை வெளியிட்டது.

இந்நிலையில், டெல்லி அரசுக்குள்ள அதிகாரங்கள் விஷயத்தில் ஐகோர்ட் தீர்ப்புகள் வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று கோரி சுப்ரீம் கோர்ட்டில் ஆம் ஆத்மி அரசு மேல்முறையீடு செய்தது. அந்த மனுவில், ‘‘டெல்லி மக்களுக்கு எந்த சேவையும் செய்ய முடியாமல் அரசு தள்ளப்பட்டுள்ளது. மாநில அரசுக்குள்ள எல்லா அதிகாரங்களையும் மத்திய அரசே எடுத்துக் கொள்ளலாமா? டெல்லி அரசு எடுக்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு மாற்றுகிறது அல்லது ரத்து செய்கிறது’’ என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

டெல்லி அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் கூறும்போது, ‘‘மத்திய, மாநில அரசு அதிகாரங்கள் தொடர்பான பிரச்சினைகளை சட்டப்படி உச்ச நீதிமன்றம்தான் விசாரிக்க முடியும். எனவே, மத்திய அரசுக்கும் டெல்லி அரசுக்கும் உள்ள அதிகாரங்கள் பிரச்சினையை விசாரிக்கும் அதிகாரம் எந்த நீதிமன்றத்துக்கு உள்ளது என்பது குறித்து முடிவாகும் வரை, டெல்லி உயர் நீதிமன்றம் எந்த தீர்ப்பையும் வெளியிட தடை விதிக்க வேண்டும். இந்த மனுவை அவசர வழக்காக கருதி ஏற்க வேண்டும்’’ என்று கூறினார்.

இதையடுத்து ஆம் ஆத்மி அரசின் மனுவை திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக சுப்ரீம் கோர்ட் ஒப்புக் கொண்டது. சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர் தலைமையிலான அமர்வு வரும் திங்கட்கிழமை விசாரணை நடத்த உள்ளது

Leave a Reply