மகளின் கருமுட்டை மூலம் பேரக்குழந்தை. லண்டன் கோர்ட் அனுமதி
இங்கிலாந்து நாட்டை சேர்ந்த 60வயது பெண்ணின் ஒரே மகள் கடந்த 2011ஆம் ஆண்டு புற்றுநோயால் மரணம் அடைந்தார். அவர் இறப்பதற்கு முன்னர் தன்னுடைய கருமுட்டை ஒரு மருத்துவமனையில் பாதுகாக்கப்பட்டு வருவதாகவும் இந்த கருமுட்டை மூலம் ஒரு குழந்தையை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று தாயிடம் கேட்டுக்கொண்டார்.
மகளின் கடைசி ஆசையை நிறைவேற்ற அந்த மூதாட்டி மருத்துவமனை நிர்வாகத்திடம் தனது கருமுட்டை தருமாறு கேட்டார். ஆனால் தகுந்த ஆவணங்கள் இல்லாமல் கருமுட்டையை தரமுடியாது என்று மருத்துவமனை நிர்வாகம் கூறியதால், லண்டன் கோர்ட்டில் மூதாட்டி வழக்கு தொடரந்தார்.
லண்டன் கீழ் கோர்ட்டில் அவரது கோரிக்கை ஏற்கபடவில்லை. ஆயினும் லண்டன் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்து தற்போது வெற்றி பெற்றுள்ளார். கருவை கருவை சுமந்து பேரக்குழந்தையை மூதாட்டி பெற்றுக் கொள்ளலாம் என்றும் தீர்ப்பு அளிக்கப்பட்டது. நீண்ட போராட்டத்தில் வெற்றி பெற்ற மூதாட்டி விரைவில் தனது மகளின் கடைசி ஆசையை நிறைவேற்றவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.