இலங்கைக்கு எதிரான 5வது ஒருநாள் போட்டி. இலங்கை 122 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி
இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே 5வது மற்றும் இறுதி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 122 ரன்கள் வித்தியாசத்தில் மிக அபாரமாக வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 7 விக்கெட் இழப்பிற்கு 324 ரன்கள் எடுத்தது. ரூட் 93 ரன்களும், வின்ஸ் 51 ரன்களும், பட்லர் 70 ரன்களும் எடுத்தனர்.
இந்நிலையில் 325 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி விளையாடிய இலங்கை அணி, 42.4 ஓவர்களில் 202 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது. இதனால் இலங்கை அணி 122 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.
5 போட்டிகள் கொண்ட இந்த தொடரை இங்கிலாந்து அணி 3-0 என்ற கணக்கில் வென்றது. ஒரு ஆட்டம் டையும், ஒரு ஆட்டம் மழை காரணமாக ரத்தும் செய்யப்பட்டது.