ஜல்லிக்கட்டுக்கு புதிய சட்டம்: சட்ட அமைச்சகம் ஒப்புதல்.

ஜல்லிக்கட்டுக்கு புதிய சட்டம்: சட்ட அமைச்சகம் ஒப்புதல்.

Jallikattuதமிழர்களின் பாரம்பர்ய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு சுப்ரீம் கோர்ட் தடை விதித்துள்ளதால் இதற்காக புதிய சட்டம் இயற்ற வேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா உள்பட அனைத்து கட்சியினர்களும் மத்திய அரசை வலியுறுத்தி வருகிறது. மேலும் பல சமூக அமைப்புகளும் இந்த கோரிக்கையை கடந்த பல மாதங்களாக வலியுறுத்தி வரும் நிலையில் ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு அனுமதி வழங்க புதிய சட்டம் இயற்றுவதற்கு சட்ட அமைச்சகம் தற்போது ஒப்புதல் அளித்துள்ளது.

ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு அனுமதி வழங்க புதிய சட்டம் இயற்றுவது தொடர்பான மத்திய அமைச்சரவையின் பரிந்துரைக்கு சட்ட அமைச்சகம் இன்று ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து, இந்த புதிய சட்ட மசோதா பாராளுமன்றத்தில் வரும் மழைக்காலக் கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சட்டம் இயற்றப்பட்டுவிட்டால் வரும் ஆண்டு ஜல்லிக்கட்டு மிகச்சிறப்பாக தமிழகத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சுப்ரீம் கோர்ட் தடை காரணமாக கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply