சீனாவில் உலகின் மிகப்பெரிய டெலஸ்கோப். வேற்றுகிரகவாசிகளையும் பார்க்கலாம்.

சீனாவில் உலகின் மிகப்பெரிய டெலஸ்கோப். வேற்றுகிரகவாசிகளையும் பார்க்கலாம்.

telescope 1
உலகின் மிகப்பெரிய டெலஸ்கோப்பை சீனா கிட்டத்தட்ட தயார் செய்து முடித்துவிட்டது. இந்த டெலஸ்கோப்பின் மூலம் வேற்று கிரகங்களில் உயிரினங்கள் வாழ்ந்தால் அவர்களையும் பார்க்க முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

சீனாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள Guizhou என்ற பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இந்த டெலஸ்கோப் 30 கால்பந்து மைதானங்களை விட பெரியது. தற்போது விஞ்ஞானிகள் சோதனை அடிப்படையில் டெலஸ்கோப்பை பரிசோதனை செய்து வருகின்றனர்.

telescopeஇந்த டெலஸ்கோப்பை வடிவமைத்து முடிக்க 240 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவாகியுள்ளது. இது இந்திய மதிப்பில் சுமார் ரூ.1613 கோடி என்பது குறிப்பிடத்தக்கது. இந்த டெலஸ்கோப்பை நிறுவ சுமார் ஐந்து ஆண்டுகாலம் ஆகியுள்ளது. இதன் திறப்புவிழா வரும் செப்டம்பரில் நடத்த சீன அரசு திட்டமிட்டுள்ளது.

Leave a Reply