டெல்லி முதல்வரின் முதன்மைச்செயாளர் கைது. சிபிஐ அதிரடியால் ஆம் ஆத்மி அதிர்ச்சி

டெல்லி முதல்வரின் முதன்மைச்செயாளர் கைது. சிபிஐ அதிரடியால் ஆம் ஆத்மி அதிர்ச்சி

delhiடெல்லி முதல்வருக்கும் மத்திய அரசுக்கும் ஏற்கனவே கடந்த சில மாதங்களாக பனிப்போர் நடந்து வரும் நிலையில் நேற்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் முதன்மை செயலர் ராஜேந்திர குமாரை ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக சிபிஐ அதிரடியாக கைது செய்தது. இதனால் ஆம் ஆத்மி அதிர்ச்சி அடைந்துள்ளது.

ஐ.ஏ.எஸ். அதிகாரியான ராஜேந்திர குமார் தனது பதவியைப் பயன்படுத்தி நிறுவனம் ஒன்றிற்கு சாதகமாகச் செயல்பட்டதாக எழுந்த புகார்கள் அடிப்படையில் கடந்த 2015ஆம் ஆண்டு சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. சிபிஐ பதிவு செய்த புகாரில் ராஜேந்திர குமார் டெல்லி கல்வித்துறையில் அதிகாரியாக இருந்த போது எண்டவர்ஸ் சிஸ்டம் பிரைவேட் லிமிடட் நிறுவனத்திற்கு 2006-ம் ஆண்டு ரூ.9.5 கோடி பெறுமான டெண்டருக்குச் சாதகமாகச் செயல்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டிருந்தது.

மேலும், ராஜேந்திர குமாரின் பள்ளித் தோழர் அசோக்குமார் என்பவருடன் இணைந்து அவர் இந்த நிறுவனத்தை தொடங்கியுள்ளார் என்று சிபிஐ கூறியுள்ளது. டெல்லி அரசுப்பள்ளிகளுக்கு தேவையான தகவல் தொழில்நுட்ப தீர்வுகள் மற்றும் மென்பொருளை இந்த நிறுவனம் வழங்குவதாக இருந்தது.

டெல்லி அரசு மீதுள்ள கோபத்தில் மத்திய அரசு முதல்வரின் முதன்மை செயலாளர் கைது நடவடிக்கையின் மூலம் பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக் ஆம் ஆத்மி புகார் கூறியுள்ளது.

Leave a Reply