தமிழ் மட்டுமே தெரிந்த நீங்கள் ஆப்பிரிக்க மொழியில் பேச வேண்டுமா? ஃபேஸ்புக்கில் ஒரு புதிய வசதி
உலக அளவில் மிக அதிகமான மக்களால் பயன்படுத்தப்படும் சமூக வலைதளம் பேஸ்புக். பேஸ்புக் உலகின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் மக்களை இணைக்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டது.
உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகள் சீனா மற்றும் இந்தியா. இதனையடுத்து ஃபேஸ்புக்கை ஒருநாடாக கணக்கிட்டால் அதுதான் உலகின் மூன்றாவது அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இருக்கும். ஆம், ஃபேஸ்புக் உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள மக்களை ஒருங்கிணைக்கும் மிகப்பெரிய நெட்வொர்க்.
ஆனால் ஃபேஸ்புக்கில் ஒருவருடன் ஒருவர் தொடர்புக்கொள்ள மொழி ஒரு தடையாக உள்ளது. இந்த தடையை நீக்க பேஸ்புக் நிர்வாகம் புதிய முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இதன் பலனாக உலகில் உள்ள எந்த மொழியில் எழுதப்பட்ட பேஸ்புக் பதிவையும் நமக்கு தெரிந்த எந்த ஒரு மொழியில் படிக்கும் வகையில் புதிய வசதி ஒன்றை உருவாக்கி அதை பரிசோதனை முறையில் சோதித்து வருகிறது. டெஸ்க்டாப்பில் பேஸ்புக் அப்ளிகேசனை பயன்படுத்தும் சில பயனாளர்களுக்கு இந்த புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
செட்டிங்கில் சில மாற்றங்களை செய்வதன் மூலம் நாம் விரும்பிய மொழியில் பேஸ்புக் பதிவுகளை படிக்கலாம். இதற்கு நமது பேஸ்புக்கின் அக்கவுண்ட் செட்டிங்கில் சென்று லாங்வேஜ்-யை கிளிக் செய்து அதில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள multilingual post என்பதில் சில மாற்றங்களை செய்து, ஒரு பேஸ்புக் பதிவை பல மொழிகளில் படிக்கும் வசதியை ஆன் செய்துக்கொள்ளலாம். இந்த வசதியை விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.