தமிழக காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் யார்? ராகுல்காந்தி தீவிரம்
சமீபத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தனது பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து தலைவர் பதவியை பிடிக்க ஒவ்வொரு கோஷ்டியின் தலைவர்களும் டெல்லியை முகாமிட்டுள்ளனர். இதில் சிதம்பரம் கோஷ்டியை சேர்ந்த பீட்டல் அல்போன்ஸூக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
ஆனாலும் இந்த காங்கிரஸ் தலைவர் பதவியை பிடிக்க சுதர்சன நாச்சியப்பன், திருநாவுக்கரசர், செல்லக்குமார், மாணிக் தாகூர், வசந்தகுமார், ‘கராத்தே’ தியாகராஜன் ஆகியோர்களும் முயற்சிக்கின்ரனர்.
இவர்களில் பலர் டெல்லியில் முகாமிட்டு சோனியாவைச் சந்தித்துள்ளனர். பீட்டர் அல்போன்ஸ், டெல்லியில் சிதம்பரத்தையும் சந்தித்து ஆதரவு கேட்டுள்ளார். அப்போது, ‘பேச்சாற்றலும், எழுத்தாற்றாலும் உள்ளவர் தலைவர் பதவியேற்றால்தான் தமிழகக் காங்கிரஸ் வலுவடையும்’ என சிதம்பரம் ஏற்கெனவே பேசிய பேச்சை இவர் சோனியாவுக்கு நினைவுபடுத்தினாராம். இளங்கோவன் ஆதரவும், பெரும்பாலான மாவட்டத் தலைவர்கள் ஆதரவும் இருப்பதால் தனக்கு வாய்ப்புக் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பீட்டர் அல்போன்ஸ் இருப்பதாக கூறப்படுகிறது.
வெளிநாடு சென்றிருந்த ராகுல்காந்தி தற்போது நாடு திரும்பியுள்ளதால் விரைவில் இதுகுறித்த முடிவை அவர் எடுப்பார் என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.