விம்பிள்டன் டென்னிஸ் போட்டி: அரையிறுதிக்கு தகுதி பெற்றவர்கள் யார் யார்?
லண்டனில் கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டி தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. லீக் சுற்றுக்கள் முடிவடைந்து தற்போது காலிறுதி போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
நேற்று நடைபெற்ற நான்கு கால்இறுதி ஆட்டங்களின் முடிவுகள் குறித்து தற்போது பார்ப்போம்.
1. நடப்பு சாம்பியனும், ‘நம்பர் ஒன்’ வீராங்கனையுமான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் 6–4, 6–4 என்ற நேர் செட்டில் ரஷ்யாவின் பாவ்லிசென்கோவாவை வீழ்த்தினார்.
2. ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியனான ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பர் 7–5, 7–6 (7–2) என்ற நேர் செட்டில் ருமேனியாவின் சிமோனா ஹாலெப்பை வீழ்த்தினார்.
3. 5 முறை விம்பிள்டன் சாம்பியன் பட்டத்தை வென்ற அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ் 7–6 (7–5), 6–2 என்ற செட் கணக்கில் கஜகஸ்தானின் யாரோஸ்லாவா ஷிவ்டோவாவை வீழ்த்தினார்.
4. ரஷியாவின் எலினா வெஸ்னினா 6–2, 6–2 என்ற செட்டில் சுலோவக்கியாவின் சிபுல்கோவாவையும் தோற்கடித்தார். .
முதல் அரையிறுதி போட்டியில் வெஸ்னினாவும் செரீனா வில்லியம்ஸூம் விளையாடவுள்ளனர். அதேபோல் 2வது அரையிறுதிபோட்டியில் வீனஸ்– கெர்பர் சந்திக்கிறார்கள்.