நாசாவின் டுவிட்டர் பக்கத்தில் ஆபாச படங்கள். அதிர்ச்சியில் அமெரிக்க விஞ்ஞானிகள்

நாசாவின் டுவிட்டர் பக்கத்தில் ஆபாச படங்கள். அதிர்ச்சியில் அமெரிக்க விஞ்ஞானிகள்

nasaஇணையதளங்களில் ஹேக்கர்கள் செய்யும் அட்டூழியத்திற்கு முடிவே இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. உலகிலேயே பாதுகாப்பு மிகுந்த பகுதி என்று கூறப்படும் நாசாவின் அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்திலேயே இன்று ஹேக்கர்கள் புகுந்து ஆபாச படங்களை பதிவு செய்துள்ளதால் அமெரிக்க விஞ்ஞானிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதன் காரணமாக நாசாவின் டுவிட்டர் தற்காலிகமாக முடக்கப்பட்டது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம், கெப்ளர் அன்ட் கே 2 என்ற தனது அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தை இயக்கி வருகிறது. இந்த பக்கத்தில் சமீபத்தில் ஊடுருவிய மர்ம நபர்கள், ஆபாசப் படங்களை பதிவேற்றம் செய்துள்ளனர். இது விஞ்ஞானிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. உடனடியாக இந்த விஷம செயல் கண்டுபிடிக்கப்பட்டு நாசாவின் கெப்ளர் பக்கத்தை முடக்கிய நாசா, அதில் இருந்த ஆபாசப் பதிவுகளை நீக்கிவிட்டு, மீண்டும் இணையப் பதிவுகளை துவக்கியுள்ளது.

இதுகுறித்து அந்த டுவிட்டர் பக்கத்தில், ‘எங்களின் டுவிட்டர் கணக்கு எதிர்பாராதவிதமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. தற்போது மீண்டும் பணிகள் துவங்கிவிட்டன. புதிய கண்டுபிடிப்புகள் குறித்த பதிவுகள் தொடரும்’ என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விஷம செயலை செய்தது யார் என்பதை கண்டுபிடிக்கும் முயற்சியில் அமெரிக்காவின் சைபர்க்ரைம் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

Leave a Reply