வணிக நூலகம்: லாபமா? மனிதமா?
பரிசு வழங்கியும், பாராட்டு கூறியும், வாழ்த்துக் கூறியும், நிகழ்வுகளை கொண்டாடியும் நிறுவன நபர்களை நேர்கோட்டிற்கு கொண்டு வருவதால் நிறுவனம் ஒரே திசையில் பயணிக்க வாய்ப்புகள் அதிகம். பணியாளர்களை நம்புங்கள். ஒன்றாக உணவு அருந்தி செலவிடும் சில நிமிடங்களில் நம்பிக்கையை வளப்படுத்துங்கள். விலையில்லா இந்த விளம்பரம் விண்ணை முட்டும் பயன் தரும்.
BUFFER என்ற நிறுவனம் நம்பகத்தன்மைக்கும், வெளிப்படை செயல்பாடுகளுக்கும் சரியான முறையில் மற்றவர்களின் உரிமைக்கு மதிப்பளித்தும் செயல்பட்டு வந்தது. ஆண்டிற்கு 60 கோடி டாலர்கள் வியாபாரம் செய்தது.
SEVENLY சமுதாய நினைவு களோடும் தனிதன்மையான வடிவமைப் பும் உள்ள ஆயத்த ஆடை நிறுவனம். ஒவ்வொரு விற்பனையிலும் 7 டாலர் களை லாப நோக்கு அல்லாத நிறுவனங் களுக்கு 43 கோடி டாலர் விற்பனையை எட்டும் வரை தொடர்ந்து செய்து வந்தது.
CLIFBAR பணியாளர்களை மிகவும் மதித்து நலத்திட்டங்களை குடும்ப உறுப்பினர்களுக்கு வழங்குவதைப் போல் வழங்கி வந்தது. போட்டிகளுக்கு உதவ பணமும், சுற்றுபுறச் சூழல் மேம்பாட்டுக்கு பண உதவியும், வேறுபட்ட எளிதான வேலை நேரப்பணியில் பின்பற்றபட்டன.
இந்த மூன்று நிறுவனங்களிலும் பொதுவான ஒன்று என்ன? எல்லா நிறு வனங்களும் லாபத்தை விட மனிதர் களுக்கும், மனிதத்திற்கும் மதிப்பளித் தன. வாடிக்கையாளர்கள், பணியாளர் கள், விற்பனையாளர்கள் மற்றும் பொதுவாக மனிதர்கள் அனைவரையும் லாபம் ஈட்டுவதை விட மிக அதிகமாக மதித்தார்கள். இந்த காரணத்தினால் அதிகபட்ச திறமை, அர்ப்பணிப்பு மற்றும் ஈடுபாடு உடைய பணியாளர்கள், மீண்டும் மீண்டும் வந்து போகும் வாடிக்கையாளர்கள் என்று ஒவ்வொரு தரவுகளிலும் இந்த நிறுவனங்கள் முத்திரையைப் பதித்தன. பணத்தை விட மனிதர்களை மதித்ததால் வியா பாரமும், லாபமும் தொடர்ச்சியாக மேல் நோக்கியே சென்றன.
DALE PARTRIDGE என்ற தொழில் முனைவோர் மற்றும் நூலாசிரியர் ஏழு நம்பிக்கைகளை விதைக்கிறார்.
மக்களே முக்கியம்
மனிதர்கள் விலைமதிப்பு மிக்கவர் கள். ஒருவரை விட மற்றவர் உயர்வல்ல. ஒவ்வொருவருக்கும் அவரவர் இடம் நிரந்தரம். நிறுவனங்கள் அனைத்துப் பணியாளர்களையும் ஒரே மாதிரியாக நடத்தவும் மதிக்கவும் வேண்டும்.
வாய்மையே வெல்லும்
இந்த மூன்று நிறுவனங்களும் உண்மையை முழுமையாகவும், விரை வாகவும், தெளிவாகவும் பகிர்ந்துகொண் டன. அதனால் வாடிக்கையாளர்களும், மூலப் பொருட்களை விற்பவர்களும் இந்த நிறுவனங்களை மேலதிகமாக நம்பினார்கள்.
ஒளிவுமறைவற்ற தன்மை
ஒளிவு மறைவற்ற தன்மை குழப்ப எண்ணங்களைத் தவிர்த்து அதிக நம்பிக்கையை வளர்க்கிறது. இது நிறுவனத்திற்குள் மட்டும் அல்ல மாறாக வாடிக்கையாளர்களிடமும்.
நம்பகத்தன்மை ஈர்க்கும்
நம்பகத்தன்மை உள்ள நிறுவனங் கள் தங்கள் நிறுவனங்களைப் பற்றிய செய்திகளை உண்மை தன்மையை மறைக்க மாட்டார்கள். தங்களுடைய கொள்கைகளிலும், திறமைகளிலும் நம்பிக்கையை வளர்த்துக் கொள்வார் கள், இதன் மூலம் புதுமையைப் படைக் கவும், சந்தையில் தங்கள் பங்களிப்பை நிறுவிக்கொள்ளவும் இயலும். நம்பகத் தன்மை வாடிக்கையாளர்கள், பணி யாளர்கள் அனைவரையும் நிறுவனத்தை நோக்கி ஈர்க்கும்.
தரமே தாரக மந்திரம்
அனைத்து பணி பிரிவுகளிலும் தரம் நம்பகத்தன்மையை வளர்க்கும். நிறுவனத்தின் நம்பகத்தன்மை வாடிக்கையாளர்கள் மீண்டும் மீண்டும் வந்து செல்லும் பொழுது உணரப்படும். அதிக விற்பனைக்கும், வாடிக்கையாளர் அர்ப்பணிப்புக்கும் தரம் மிகவும் முக்கியம். வியாபாரத்தின் அனைத்து முகப்புகளிலும் பெரு வெற்றி பெற தரம் அவசியம்.
தாராளம் திரும்ப தரும்
இந்த நிறுவனங்களின் கூறுகள் தாராளத்தை தாராளமாக காட்டுகின்றன. நிறுவனங்கள் பணியாற்றும் வகையி லும், பணத்தை பரிவர்த்தனை செய் வதிலும் மிகவும் தாராளமாக இருந்ததால் நிறுவனம் பற்றிய ஒரு நல்ல அபிப்ராயம் உருவானது. லாபநோக்கு இல்லாத நிறுவனங்களுக்கு கொடுத்ததிலோ, போட்டிகளுக்கு உதவி தொகை வழங்கியதிலோ, சுற்றுப்புறச் சூழலை மேம்படுத்தியதிலோ, ஏழாண்டிற்கு 2 மாத சம்பள விடுப்பு கொடுத்ததிலோ தாராளத்தை எந்த இடத்திலும் அவர்கள் சுருக்கவில்லை.
தைரியம் நிலைக்கும்
எவ்வளவு கடினமான மோசமான முடிவுகளாக இருந்தாலும். பணி யாளர்கள் வாடிக்கையாளர்களுக்கும் மற்றும் விற்பனையாளர்கள் தொடர்பான மிகச்சரியான சிறந்த முடிவுகளை மட்டுமே அர்ப்பணிப்போடு மேற்கொண்டதால் பணத்தை பற்றியோ, நம்பகத்தன்மையை வளர்ப்பதிலோ இந்த நிறுவனங்கள் குறை வைக்கவில்லை. மாறாக ஆக்க பூர்வமான பாதையில் பயணம் செய்தன.
நூலாசிரியர் கூறியதை போல் மனிதமா, லாபமா என்ற கேள்விக்கு மனிதமே என்ற விடையாக இருந்தால் மேலே சொன்ன ஏழு நம்பிக்கைகளும் துருவ நட்சத்திரங்களாகும். பொய்யும், தரமில்லாத பொருட் களும், திருப்தி இல்லாத பணியாளர் களும், நம்பிக்கையில்லாத வாடிக்கை யாளர்களும், ஏமாற்றப்பட்டுவிடு வோமோ என்ற பயத்தில் உள்ள விற்பனையாளர்களும் நிறுவனத்தின் ஒவ்வொரு செங்கலையும் உருவி எடுக்கும் நேரத்திற்காக காத்திருப்பார்கள். அதைத் தவிர்க்க இந்த ஏழு நம்பிக்கைகளை விதைத்து அவற்றைப் பின் பற்றினால் நீண்ட கால அடிப்படையில் வெற்றியும், சாதனையும் ஒன்றை ஒன்று மிஞ்சும். குறிக்கோளான நிறுவனம் என்ற பெயர் எஞ்சும்.
மனிதத்திற்கான வழிமுறைகள்
நீண்ட கால அடிப்படையில் ஒருமித்த நிறுவனங்களை பின்தள்ளி முகட்டிலே முன்நிற்கும். உங்கள் நிறுவனத்தில் எவ்வாறு நீங்கள் இது போன்ற நம்பிக்கையை ஏற்படுத்தி மனிதத்தை லாபத்திடம் இருந்து பிரிக்கிறீர்களோ அப்போது உங்களின் வெற்றி உறுதி செய்யப்படுகின்றது. நிறுவனம் பற்றிய செய்திகளை முகநூலிலும், வலைதளங்களிலும் பகிர்ந்து கொள்ளலாம். தனிப்பட்ட திறன் மேம்பாட்டுக்குத் தனி கவனம் செலுத்த வேண்டும். நிறுவனத்திற்குள் ஊழியர்களை ஊமைகளாக மாற்றாமல் பலனும், பலமும் தரும் மனிதர்களாக மாற்று தல் அவசியம். வாடிக்கையாளர் களும், விற்பனையாளர்களும் ஒளிவு மறைவற்ற ரகசியம் இல்லாத தொழிலாளர்களிடம் எளிதில் தங்களை இணைத்துக்கொள்வார்கள். நீங்கள் மனிதர்களை மட்டும் மாற்றவில்லை வியாபாரத்தையும் மாற்றுகிறீர்கள்.
மனிதத்தை விதைத்தல்
மாதம் ஒரு நாளோ ஏதேனும் ஒரு நாளோ யாரேனும் ஓரிருவரை அழைத்துப் பேசுங்கள். ஒன்றாக உணவு உண்ணுங்கள். பரிசு வழங்கியும், பாராட்டு கூறியும், வாழ்த்துக் கூறியும், நிகழ்வுகளை கொண்டாடியும் நிறுவன நபர்களை நேர்கோட்டிற்கு கொண்டு வருவதால் நிறுவனம் ஒரே திசையில் பயணிக்க வாய்ப்புகள் அதிகம். பணியாளர்களை நம்புங்கள். ஒன்றாக உணவு அருந்தி செலவிடும் சில நிமிடங்களில் நம்பிக்கையை வளப்படுத்துங்கள். விலையில்லா இந்த விளம்பரம் விண்ணை முட்டும் பயன் தரும். இதில் கூறப்பட்டுள்ள அனைத்துக் கருத்துகளும் ஏதோ நாளை காலை உலகே மாறி வண்ண விளக்குகளால் ஜொலித்து வசந்த காலம் வந்ததை போல எண்ணிக்கொள்ளக் கூடாது.
ஏதோ அனைத்து நிறுவனங் களுக்கும் சர்வரோக நிவாரணியாக ஏழு விதிகளையும் ஏற்றுக் கொள்ளக் கூடாது. ஒவ்வொரு நிறுவனமும் தனித்தன்மை வாய்ந்தது. ஒவ்வொரு தொழில்முனைவோரும் நிறுவன தலைவரும் ஒரே மாதிரியானவர்கள் அல்ல. உணவு உண்பதால் உணர்வு பிரச்சினைகள் வடிகால் தேடி வழிந்து விடும் என்று தவறாக கொள்ளக் கூடாது. மாறாக நிறுவனத்தோடும் பணியாளர்களோடும், வாடிக்கை யாளர்களோடும், விற்பனையாளர் களோடும் ஒவ்வொரு தொழில்முனை வோரும், நிறுவன தலைவரும் தங்களை சரிசமனாக நிலை நிறுத்தி முறையான ஆய்விற்கு பிறகு ஏழு விதிகளையும் மொத்தமாகவோ, முனை யுங்கள் முயற்சியுங்கள். முன்னேறுங் கள். முனைப்பாக வெற்றி வழி சென்று வெற்றியை சேருங்கள்.