பட்டுக்குச் சவால்விடும் மலிவு விலை சேலைகள்!
விதவிதமான வேலைப் பாடுகளுடனும் பளீரிடும் ஜரிகையோடும் கண்ணைக் கவரும் சேலைகள், பட்டுச் சேலைகள் இல்லை என்று சொன்னால் யாருமே நம்ப மாட்டார்கள். மனதுக்கினிய நிறங்களில் பட்டுச் சேலையைப் போலவே உள்ளம் கொள்ளை கொள்ளும் அவை கேரண்டி பட்டு எனப்படும் செயற்கை இழை சேலைகள்!
இவற்றின் ஆரம்ப விலை 200 ரூபாய் என்பதாலேயே வாடிக்கையாளார்களின் எண்ணிக்கை அதிகம்! சேலம் மாவட்டம் இளம்பிள்ளை கிராமத்தில் இந்தச் சேலைகள் தயாராகின்றன. சேலம் பேருந்து நிலையத்திலிருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ள இடங்கணசாலை பேரூராட்சிக்கு உட்பட்ட இளம்பிள்ளையிலும், சுற்றுவட்டாரப் பகுதிகளான சிவதாபுரம், பனங்காடு, திருமலைகிரி, ஏழுமாத்தானூர், காட்டுப்புதூர், தாரமங்கலம் உள்ளிட்ட பகுதிகளிலும் ஜரிகை சேலைகள் நெய்யப்படுகின்றன.
சேலம் மாவட்டம் முழுவதும் ஐந்து லட்சம் விசைத்தறிகள் மூலம் ஜரிகை சேலை தயாரிப்பில் பல லட்சம் மக்கள் ஈடுபட்டு வருகின்றனர். பாலிஸ்டர், காட்டன் துணியில் ஃபுளோரா, பிஜிகச், காப்பர் ஜரிகை ரகங்களைக் கொண்டு இந்தச் சேலைகள் நெய்யப்படுகின்றன. பட்டுப் புடவைகளுக்கே சவால்விடும் அளவுக்கு ஜரிகைகளின் மினுமினுப்பும், சேலை வண்ணங்களில் காணப்படும் ஜொலிஜொலிப்பும் பார்க்கிறவர்களை மயக்குகின்றன.
சேலம் மாவட்டம் முழுவதும் ஐந்து லட்சம் விசைத்தறிகள் மூலம் ஜரிகை சேலை தயாரிப்பில் பல லட்சம் மக்கள் ஈடுபட்டு வருகின்றனர். பாலிஸ்டர், காட்டன் துணியில் ஃபுளோரா, பிஜிகச், காப்பர் ஜரிகை ரகங்களைக் கொண்டு இந்தச் சேலைகள் நெய்யப்படுகின்றன. பட்டுப் புடவைகளுக்கே சவால்விடும் அளவுக்கு ஜரிகைகளின் மினுமினுப்பும், சேலை வண்ணங்களில் காணப்படும் ஜொலிஜொலிப்பும் பார்க்கிறவர்களை மயக்குகின்றன.
கரீஷ்மா, அபூர்வா, சாமுத்திரிகா பட்டு, கோட்டா காட்டன் பட்டு, மோனா காட்டன், மல்டி கலர் சேலை, எம்போஸ், பிக்கன் பிக் என கிட்டத்தட்ட இருபது விதமான ரகங்களில் ஜரிகை சேலைகள் தயாராகின்றன. ஒவ்வொன்றும் தனி வடிவமைப்புடன் கூடிய இருப்பது கூடுதல் சிறப்பு! பட்டுச் சேலைகளின் விலைகளைக் கேட்டு மலைத்துப் போகிறவர்கள், சேலம் ஜரிகை புடவைகளை ஐந்து, ஆறு என்று அள்ளிக்கொண்டு செல்கின்றனர்.
கேரண்டி பட்டுச் சேலைகளுக்காகவே இளம்பிள்ளையில் நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் இருக்கின்றன. இருநூறு ரூபாயில் தொடங்கி ஐந்தாயிரம் ரூபாய் வரையிலான சேலைகள் இங்கே கிடைக்கின்றன. தமிழகம் மட்டுமல்லாமல் ஆந்திரம், கேரளம், மகாராஷ்டிரம், மேற்கு வங்கம், உத்தரப் பிரதேசம் என வெளி மாநிலங்களுக்கும் இந்தச் சேலைகள் அனுப்பப்படுகின்றன.
சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து உள்ளிட்ட அயல்நாடுகளுக்கும் ஏற்றுமதியாகின்றன. வீட்டிலிருந்தபடியே சேலை வியாபாரம் செய்கிற பெண்கள், இளம்பிள்ளை கிராமத்திலிருந்து மொத்தமாக வாங்கிச் செல்கின்றனர். நூற்றுக் கணக்கில் பட்டுச் சேலைகள் வைத்திருப்பவர்களும் கேரண்டி புடவைகளின் தனித்தன்மைக்காகவே இவற்றை விரும்பி வாங்கிச் செல்கின்றனர். அனைத்துத் தரப்புப் பெண்களின் அமோக ஆதரவுடன் களைகட்டுகிறது கேரண்டி சேலை வியாபாரம்!