இலவச தையல் பயிற்சி பெற அழைப்பு
பெரம்பலூரில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிராமிய சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் இலவச தையல் கலை பயிற்சி பெறலாம் என்றார் மைய இயக்குநர் (பொ) பா. அருள்தாசன்.
இதுகுறித்து அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஜூலை 15 ஆம் தேதி முதல் தையல் கலை பயிற்சி இலவசமாக அளிக்கபட உள்ளது. இப்பயிற்சி பெற 18 வயது முதல் 40 வயதுக்குள்ளாகவும், குறைந்தபட்சம் 8 ஆம் வகுப்பு படித்தவராகவும், பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவராகவும் சுயத்தொழில் தொடங்குவதில் ஆர்வம் உள்ளவராகவும் இருக்க வேண்டும்.
விருப்பம் உள்ளவர்கள் பெரம்பலூர் மதனகோபாலபுரத்தில் செயல்பட்டு வரும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் முதல் தளத்தில் உள்ள கிராமிய சுய வேலைவாய்ப்பு பயிற்சி மைய இயக்குநரிடம் தங்களது பெயர், வயது, முகவரி, கல்வித்தகுதி ஆகியவற்றை குறிப்பிட்டு விண்ணப்பிக்கவும்.
விண்ணப்பத்துடன் தேவையான சான்றுகளை இணைத்து, ஜூலை 14 ஆம் தேதி நடைபெறும் நேர்முகத் தேர்வு மற்றும் நுழைவுத் தேர்வில் பங்கேற்று, தேர்ச்சி பெறுபவர்களுக்கு பயிற்சிக்கு அனுமதி வழங்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு 04328 277896 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.