அமெரிக்கா: சிறையின் கதவை உடைத்த 8 கைதிகளுக்கு காவலர்கள் பாராட்டு. ஏன் தெரியுமா?

அமெரிக்கா: சிறையின் கதவை உடைத்த 8 கைதிகளுக்கு காவலர்கள் பாராட்டு. ஏன் தெரியுமா?

jailசிறையில் உள்ள கைதிகள் தப்பித்து செல்வதற்கோ அல்லது வேறு காரணங்களுக்கோ சிறைக்கதவை உடைத்தால் அவர்களுக்கு தண்டனை கடுமையாகும் என்பதுதான் உலகெங்கிலும் உள்ள சிறை விதி கூறுகின்றது. ஆனால் அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள சிறைச்சாலை ஒன்றில் விலங்கிடப்பட்ட கைதிகள் சிறையினை உடைத்து கொண்டு வெளியே வந்ததற்கு அந்நாட்டு காவல்துறை அதிகாரிகள் பாராட்டியுள்ளனர். ஏனெனில் கைதிகள் சிறையின் கதவை உடைத்தது நெஞ்சு வலியால் துடித்து கொண்டிருந்த காவலர் ஒருவரின் உயிரை காப்பாற்றுவதற்காக என்பதால்….

அமெரிக்காவின் போர்ட் வொர்த் நகரில் உள்ள மாவட்ட நீதிமன்ற கட்டிடத்தில் இயங்கி வரும் அந்த சிறையில் 8 கைதிகள் அடைக்கப்பட்டுயிருந்தனர். இந்த சிறையில் பணிபுரிந்து கொண்டிருந்த காவலர் ஒருவர் திடீரென நெஞ்சு வலியினால் சரிந்து விழுந்துள்ளார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த 8 கைதிகள் கூச்சலிட்டு உதவிக்கு அழைத்துள்ளனர். ஆனால் ஒருவரும் அங்கு வரவில்லை.

இந்நிலையில் கைதிகளில் ஒருவர் சிறையின் கதவை உடைத்தார். கைதிகள் அனைவரும் வெளியே வந்து கீழே கிடந்த சிறை காவலரை தூக்கி முதலுதவி செய்தனர். இந்த நேரத்தில் கைதிகளுக்குள் சண்டை என கருதி சத்தம் கேட்டு கீழே வந்த காவல்துறை அதிகாரிகள் மூர்ச்சையுடன் இருந்த காவலரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். .

சிறைக்கதவின் பூட்டை உடைத்ததால்தான் காவலர் காப்பற்றப்பட்டார் என்பதை அறிந்து 8 கைதிகளுக்கு சிறைக்காவலர்கள் பாராட்டு தெரிவித்தனர். அதேவேளையில் கைதிகள் உடைக்கும் நிலையில் பூட்டு இருந்ததால் உடனே சிறையின் பூட்டுகள் வலுப்படுத்தப்படுத்தவும் அவர்கள் உத்தரவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.youtube.com/watch?v=aYkl5C-QgnA

Leave a Reply