ஒரே இடத்தில் 3200 பேர் நிர்வாணமாக குவிந்தது ஏன்? இங்கிலாந்தில் பரபரப்பு

ஒரே இடத்தில் 3200 பேர் நிர்வாணமாக குவிந்தது ஏன்? இங்கிலாந்தில் பரபரப்பு

இங்கிலாந்து நாட்டில் நடைபெற்ற ஒரு கலை நிகழ்ச்சிக்காக ஆண்கள் மற்றும் பெண்கள் என சுமார் 3200 பேர் தங்கள் உடைகளை களைந்து நிர்வாண போஸ் கொடுத்தனர்.

Spencer Tunick என்ற அமெரிக்க ஓவியர் வித்தியாசமான நிகழ்ச்சி ஒன்றை சமீபத்தில் இங்கிலாந்து நாட்டில் நடத்தியுள்ளார். ஆண்கள், பெண்கள் என சுமார் 3200 பேர்களை உடலில் நீல நிற பெயிண்டை மட்டும் தடவி, முழுநிர்வாணமாக இங்கிலந்தின் சாலைகளில் படுக்க வைத்தும், பாலத்தில் நடக்க வைத்தும் விதவிதமான ஓவியங்களை வரைந்தும், புகைப்படங்களை எடுத்தும் உள்ளார்.

இந்த கலை ஓவியத்தில் கலந்து கொண்ட அனைவரும் பணம் வாங்கிக்கொள்ளாமல் போஸ் கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களும், வரைந்த ஓவியங்களும் விரைவில் நடைபெறவுள்ள கண்காட்சியில் வைக்கப்படவுள்ளதாகவும், இந்த கண்காட்சியில் கிடைக்கும் மொத்த வருமானத்தையும் தொண்டு நிறுவனம் ஒன்றிற்கு அன்பளிப்பாக வழங்க Spencer Tunick தீர்மானித்துள்ளாராம்.

4 3 2 1

Leave a Reply