தேடப்படும் குற்றவாளியான லலித் மோடிக்கு குடியுரிமை கொடுக்குமா கரீபியன் தீவு?
ஐ.பி.எல். தொடரை இந்தியாவில் முதன்முதலாக அறிமுகப்படுத்திய லலித் மோடி மீது, வரி ஏய்ப்பு உள்பட பல மோசடி வழக்குகள் இந்திய நீதிமன்றங்களில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு காரணமாக இந்திய அரசால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு, ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் திடீரென கடந்த 2010ஆம் ஆண்டு அவர் பிரிட்டனுக்கு தப்பிச் சென்றுவிட்டார்.
தற்போது லண்டனில் வசித்து வரும் லலித் மோடி, கரீபியன் தீவிகளில் ஒன்றான செயின்ட் லூசியாவில் குடியுரிமை கேட்டு விண்ணப்பித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. அதுமட்டுமின்றி லலித் மோடியின் மனைவி மற்றும் பிள்ளைகளும் குடியுரிமை கேட்டு விண்ணப்பித்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. செயின்ட் லூசியா வரிச்சலுகையை வாரி வழங்கும் இடங்களில் ஒன்று என்பதால் இந்த தீவில் நிரந்தரமாக குடியேற லலித் மோடி திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
ஆயினும் செயின்ட் லூசியா அரசு, லலித் மோடியின் பின்னணி குறித்து இந்தியாவிடம் கேட்கும் பட்சத்தில், அவருக்கு குடியுரிமை கிடைப்பதில் சிக்கல் ஏற்படலாம் என கூறப்படுகிறது..