லாஃபார்ஜ் ஹோல்சிம் குழுமத்தின் சிமென்ட் ஆலையை வாங்குகிறது நிர்மா: ரூ.9,300 கோடிக்கு ஒப்பந்தம் கையெழுத்து
சலவை சோப் மற்றும் சலவைத் தூள் தயாரிப்பில் முன்னணியில் உள்ள நிர்மா லிமிடெட் நிறுவனம் பிரான்ஸ் மற்றும் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த லாஃபார்ஜ் ஹோல்சிம் நிறுவனத்தை வாங்க முடிவு செய்துள்ளது. ரூ. 9,300 கோடிக்கு (140 கோடி டாலர்) இந்நிறுவனத்தை வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. லஃபார்ஜ் நிறுவனம் பிரான்ஸைச் சேர்ந்தது. ஹோல்சிம் நிறுவனம் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்ததாகும். கடந்த ஆண்டு இரு நிறுவனங் களும் இணைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டட்டது.
சிமென்ட் உற்பத்தியில் உலகின் முதலாவது நிறுவனமாகத் திகழும் லாஃபார்ஜ் ஹோல்சிம் நிறுவனத்துக்கு இந்தியாவில் உள்ள மூன்று ஆலைகளை நிர்மா நிறுவனம் வாங்க முடிவு செய்துள்ளது.
இந்நிறுவனத்தை வாங்க சஜன் ஜிண்டால் குழுமத்தின் ஜேஎஸ்டபிள்யூ சிமென்ட் நிறுவனம் மற்றும் பார்மா தயாரிப்பில் உள்ள அஜய் பிரமிளுக்குச் சொந்தமான பிரமிள் என்டர்பிரைசஸ் நிறுவனங்கள் போட்டியிட்டன. ஆனால் கூடுதல் தொகை கேட்டு நிறுவனத்தை கையகப்படுத்த நிர்மா லிமிடெட் முன்வந்துள்ளது. மூன்று சிமென்ட் ஆலைகள் மற்றும் இரண்டு அரவை ஆலைகள் இனி நிர்மா லிமிடெட் வசமாகும்.
அகமதாபாத்தைச் சேர்ந்த கர்சன்பாய் படேல் என்பவருக்குச் சொந்தமான நிர்மா லிமிடெட் நிறுவனம் சிமென்ட் உற்பத்தியை அதிகரிக்க முடிவு செய்துள்ளது. இந்த ஆலை ஆண்டுக்கு 1.10 கோடி டன் சிமென்ட் உற்பத்தி செய்யும் திறன் கொண்டது.
ஏற்கெனவே நிர்லா லிமிடெட் ராஜஸ்தானில் 20 லட்சம் டன் சிமென்ட் உற்பத்தித் திறன் கொண்ட ஆலையை செயல்படுத்தி வருகிறது. அத்துடன் குஜராத் மாநிலத்தில் ஒரு புதிய சிமென்ட் ஆலையை ஏற்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது.
கடன் சுமையைக் குறைப் பதற்காக லாஃபார்ஜ் ஹோல்சிம் நிறுவனம் இத்தகைய நடவடிக் கையை எடுத்துள்ளது. கையகப் படுத்தல் நடவடிக்கையானது நிறுவனங்களிடையிலான போட் டியை உறுதி செய்யும் அமைப்பு (சிசிஐ) ஒப்புதலுக்குப் பிறகு நிறைவேறும்.
இருப்பினும் இந்நிறுவனம் தொடர்ந்து இந்திய நடவடிக்கையில் ஈடுபடும். துணை நிறுவனங்களான ஏசிசி லிமிடெட் மற்றும் அம்புஜா சிமென்ட்ஸ் லிமிடெட் ஆலைகளை தொடர்ந்து செயல்படுத்தப் போவ தாக நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட் டுள்ளது. இவ்விரு நிறுவனங்களின் சிமென்ட் உற்பத்தி ஆண்டுக்கு 6 கோடி டன்னாகும்.
கடந்த ஆண்டு 50 லட்சம் டன் உற்பத்தித் திறன் கொண்ட ஆலைகளை விற்பனை செய்ய வேண்டும் என சிசிஐ வழிகாட்டியது. இதன் மூலம் இந்தியாவில் ஒரே நிறுவனமாக லாஃபார்ஜ் ஹோல்சிம் செயல்பட வேண்டும் என வலியுறுத்தியிருந்தது.
இதையடுத்து இந்தியாவின் கிழக்குப் பிராந்தியத்தில் உள்ள சிமென்ட் ஆலையை பிர்லா குழுமத்துக்கு ரூ. 5 ஆயிரம் கோடிக்கு இந்நிறுவனம் விற்பனை செய்தது. ஆனால் அந்த விற்பனை நடைபெறவில்லை. சுரங்கங்கள் மற்றும் பிற வளங்களை மாற்றம் செய்வதில் ஏற்பட்ட நடைமுறைச் சிக்கல் காரணமாக இது நடைபெறவில்லை.
ரொக்க நிதி வளம் மிக்க நிறுவனமாக நிர்மா லிமிடெட் திகழ்கிறது. சிமென்ட் உற்பத்தியில் முன்னணியில் திகழும் நோக்கில் அமெரிக்காவில் உள்ள சோடா ஆஷ் நிறுவனத்தை சமீபத்தில் வாங்கியது.
இந்த விற்பனை மூலம் ரூ. 10 ஆயிரம் கோடியைத் திரட்ட ஹோல்சிம் திட்டமிட்டிருந்தது. மற்ற இரு நிறுவனங்களும் ரூ. 9 ஆயிரம் கோடி வரை விலை கேட்டன. அதைவிட கூடுதல் தொகைக்கு ஏலம் கேட்ட நிர்மா லிமிடெட் வசம் இவற்றை விற்க ஹோல்சிம் முடிவு செய்ததாக நிறுவனத்துக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த ஒப்பந்தம் நடைமு றைக்கு வந்தால் 2016-ம் ஆண்டில் கையெழுத்தான மிக அதிக மதிப்பு கொண்ட கையகப்படுத் தல் நடவடிக்கை இதுவாகத் தானிருக்கும்.
லாஃபார்ஜ் ஹோல்சிம் நிறுவனம் ஏற்கெனவே தென் கொரியாவில் உள்ள ஆலையை விற்பனை செய்துவிட்டது. அதே போல சவூதி அரேபியாவில் இந்நிறு வனத்துக்கு இருந்த பங்குகளை யும் விற்பனை செய்துவிட்டது குறிப்பிடத்தக்கது.