காஷ்மீர் பிரச்சனை குறித்து உலக தலைவர்கள் கூறுவது என்ன?

காஷ்மீர் பிரச்சனை குறித்து உலக தலைவர்கள் கூறுவது என்ன?

kashmirகாஷ்மீர் கலவரம் இந்தியாவின் உள்விவகாரம் என்றும் அதில் தலையிடும் பேச்சுக்கே இடமில்லை என்றும் அமெரிக்க அரசு திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்க அரசின் செய்தித் தொடர்பாளர் பிரபல ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: காஷ்மீரில் கலவரம் தொடர்பான தகவல்கள் கவலை தருகின்றனர். அனைத்து தரப்பினரும் அமைதியை ஏற்படுத்த ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும் காஷ்மீர் கலவரம் இந்தியாவின் உள்விவகாரம் என்றும் அதில் ஒருபோதும் தலையிடமாட்டோம் என்றும் இதுகுறித்து இந்திய அரசிடம் நாங்கள் எந்தவித பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில் ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி-மூன் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது: காஷ்மீர் கலவரத்தில் பலர் பலியாகி இருப்பது கவலையளிக்கிறது. வன்முறையைக் கட்டுப்படுத்துவதில் பாதுகாப்புப் படையினர் மிகுந்த கவனமுடன் செயல்பட வேண்டும். உயிரிழப்புகள் ஏற்படுவதைத் தடுக்க வேண்டும். அனைத்துத் தரப்பினரும் அமைதி காக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

ஐ.நா. செய்தித் தொடர்பாளர் ஸ்டீபானி துஜாரிக் இதுகுறித்து கூறியதாவது: காஷ்மீர் நிலவரம் குறித்து கவலையடைந்துள்ளோம். எனினும் அது மிகப்பெரிய பிரச்சினை அல்ல. அதைவிட மோசமான உள்நாட்டுப் போர்கள் உலகின் பல்வேறு இடங்களில் நடந்து வருகின்றன. அவற்றை தடுத்து நிறுத்தவே ஐ.நா. சபை தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது என்று அவர் தெரிவித்தார்.

Leave a Reply