இன்றைய ராசிபலன் 13/07/2016
மேஷம்
உங்களுடைய அறிவாற்றலை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சகோதரங்கள் உங்கள் வளர்ச்சிக்கு பக்கபலமாக இருப்பார்கள். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்
ராசி குணங்கள் ரிஷபம்
வர வேண்டிய பணம் கைக்கு வரும். உறவினர், நண்பர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: ஊதா, இளஞ்சிவப்பு
ராசி குணங்கள் மிதுனம்
குடும்பத்தாரின் ஆதரவுப் பெருகும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. அக்கம்-பக்கம் வீட்டாருடன் இணக்கமான சூழ்நிலை உருவாகும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: மயில் நீலம், ப்ரவுன்
ராசி குணங்கள் கடகம்
பழைய பிரச்னைகளுக்கு சுமூக தீர்வு காண்பீர்கள். தாயாருடன் வீண் விவாதம் வந்துப் போகும். பணப்பற்றாக்குறை நீடித்தாலும் கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். புது வேலை அமையும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனை தீரும். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, பச்சை
ராசி குணங்கள் சிம்மம்
திட்டவட்டமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். விருந்தினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: பிங்க், க்ரீம் வெள்ளை
ராசி குணங்கள் கன்னி
கடந்த இரண்டு நாட்களாக குடும்பத்தில் இருந்து வந்த கூச்சல், குழப்பம் விலகும். அழகு, இளமைக் கூடும். தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: பிஸ்தா பச்சை, மஞ்சள்
ராசி குணங்கள் துலாம்
ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் சில காரியங்களை போராடி முடிப்பீர்கள். வீட்டிலும், வெளியிலும் மற்றவர்களை அனுசரித்துப் போங்கள். முன் கோபத்தால் பகை உண்டாகும். யாரையும் தூக்கி எறிந்து பேசாதீர்கள். லேசாக தலை வலிக்கும். வியாபாரத்தில் தொழில் சம்பந்தப்பட்ட ரகசியங்களை வேலையாட்களிடம் பகிர்ந்துக் கொள்ள வேண்டாம். உத்யோகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: மெரூண், வெள்ளை
ராசி குணங்கள் விருச்சிகம்
எடுத்த வேலையை முடிப்பதற்குள் அலைச்சல் அதிகரிக்கும். பிள்ளைகளை அன்பால் அரவணைத்துப் போங்கள். வாகனத்தில் கவனம் தேவை. முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். திடீர் பயணங்கள் உண்டு. வியாபாரத்தில் வேலையாட்களிடம் விவாதம் வேண்டாம். உத்யோகத்தில் சக ஊழியர்களால் சங்கடங்கள் வரும். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: மயில் நீலம், பிங்க்
ராசி குணங்கள் தனுசு
ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். புது பொருள் சேரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் உங்களின் புதிய முயற்சிகளை அதிகாரி பாராட்டுவார். அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ் பச்சை, ரோஸ்
ராசி குணங்கள் மகரம்
சொன்ன சொல்லைக் காப்பாற்றத் துடிப்புடன் செயல்படுவீர்கள். சொந்த-பந்தங்களில் சிலர் கேட்ட உதவியை செய்வீர்கள். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத்திறமை வெளிப்படும். அதிஷ்ட எண்: 8 அதிஷ்ட நிறங்கள்: இளஞ்சிவப்பு, க்ரீம் வெள்ளை
ராசி குணங்கள் கும்பம்
கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். தாழ்வுமனப்பான்மையிலிருந்து விடுபடுவீர்கள். உறவினர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஆதரவுக் கிட்டும். உத்யோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: அடர் சிவப்பு, கிரே
ராசி குணங்கள் மீனம்
சந்திராஷ்டமம் தொடர்வதால் தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் குழம்புவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்கள் உங்கள் நிறை, குறைகளை எடுத்துச் சொன்னால் கோபப்படாதீர்கள். யாரும் உங்களை புரிந்துக் கொள்ளவில்லை என ஆதங்கப்படுவீர்கள். உடல் நலம் பாதிக்கும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். உத்யோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், வைலெட்