250 தமிழக மீனவர்களுக்கு இலங்கை கடல் பகுதியில் மீன்பிடிக்க அனுமதி
இலங்கையின் கடல் எல்லைக்குள் அடிக்கடி மீன் பிடிப்பதாக இலங்கை படையினர்களால் தமிழக மீனவர்கள் அடிக்கடி கைது செய்யப்படும் பிரச்சனைக்கு தீர்வு காண மத்திய அரசை மாநில அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதன் காரணமாக மத்திய அரசு இலங்கையுடன் சமீபத்தில் பேச்சுவார்த்தை நடத்தியது. இந்த பேச்சுவார்த்தையின் பயனாக இலங்கையின் கடல் எல்லையில் உள்ள ஆழ்கடலில் மீன்பிடிக்க 250 தமிழக மீனவர்களுக்கு அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இலங்கை கடல் பகுதியில் உள்ள ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு முழுமையாக தடை விதிக்கக்கோரும் மசோதா ஒன்றை கடந்த பிப்ரவரி மாதம் இலங்கை நாடாளுமன்றத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பி. சுமந்திரன் கொண்டு வந்தார். இந்த மசோதா நிறைவேறிவிட்ட போதிலும், இன்னும் அமலுக்கு வரவில்லை. எனவே, இன்னும் அமலுக்கு வராத நிலையில், தமிழக மீனவர்களுக்கு இலங்கை அரசு அனுமதி அளிக்க உள்ளது.
இலங்கை அரசின் இந்த முடிவை தமிழக மீனவ அமைப்பை சேர்ந்தவர்கள் வரவேற்றுள்ளன. ஆயினும் இந்த அனுமதி 6 கடலோர மாவட்டங்களுக்கும் சேர்த்து, 250 மீனவர்களுக்கு மட்டும் அனுமதி அளிப்பது என்பது குறைவான எண்ணிக்கை என்றும் இன்னும் அதிகமான மீனவர்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்றும் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Srilankan Govt decided to allow 250 tamil fishermen