அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு டெல்லி ஐகோர்ட் போட்ட வித்தியாசமான உத்தரவு

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு டெல்லி ஐகோர்ட் போட்ட வித்தியாசமான உத்தரவு

aravindகடந்த ஆண்டு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தொலைக்காட்சி ஒன்றில் பேட்டி அளிக்கும்போது டெல்லி காவல்துறை அதிகாரிகள் சிலரை ‘தூலா’ என்ற வார்த்தையை பயன்படுத்தி வர்ணித்தார். இந்த தூலா என்ற வார்த்தைக்கு லஞ்சத்தில் கொழுத்த போலீஸ் என்று அர்த்தமாம். பேச்சு மொழியில் மட்டும் உள்ள வார்த்தைக்கு உடனடியாக என்ன அர்த்தம் என்று விளக்குமாறு டெல்லி ஐகோர்ட் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உத்தரவிட்டுள்ளது.

டெல்லி காவல்துறையை அரவிந்த் கெஜ்ரிவால் இழிவுபடுத்தியதாக 2015ஆம் ஆண்டு ஜூலை மாதம், லஜ்பத் நகர் காவல் நிலையத்தைச் சேர்ந்த தனேஜா என்ற காவலர் அவதூறு வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.

இந்த வழக்கில் நேரில் ஆஜராக அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டது, இந்த உத்தரவை நிறுத்திவைக்கக் கோரி, டெல்லி உயர்நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி முக்தா குப்தா, ஆகஸ்ட் 21-ம் தேதி வரை, விசாரணைக்காக நேரில் ஆஜராவதில் இருந்து கெஜ்ரிவாலுக்கு விலக்கு அளிக்க உத்தரவிட்டார். எனினும், ‘தூலா’ என்ற வார்த்தையின் அர்த்தம் என்ன என்பதை நீதிமன்றத்துக்கு அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பில் விளக்கம் வேண்டும் என, நீதிபதி உத்தரவிட்டார்.

‘அந்த வார்த்தை எந்த அகராதியிலும் இல்லை. அர்த்ததம் தெரிந்து தான் கேஜ்ரிவால் அதை பயன்படுத்தியிருக்க வேண்டும். எனவே, அதன் அர்த்தத்தை நீதிமன்றத்திடம் விளக்கவேண்டும்’ என நீதிபதி கூறியுள்ளார்.

Leave a Reply