உலகில் அதிக சம்பளம் பெறும் 100 நட்சத்திரங்கள் பட்டியல். போர்ப்ஸ் பத்திரிகை வெளியீடு
அமெரிக்காவில் இயங்கி வரும் பிரபல பத்திரிகை போர்ப்ஸ், உலக அளவில் அதிக சம்பளம் வாங்கும் 100 நட்சத்திரங்கள் கொண்ட பட்டியல் ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. 2015 ஜூன் முதல் 2016 ஜூன் வரையிலான காலகட்டத்தில் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ள 100 நபர்களின் மொத்த சம்பளம் 510 கோடி அமெரிக்க டாலர் என அந்த பத்திரிகை தகவல் வெளியிட்டுள்ளது
போர்ப்ஸ் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளவர் அமெரிக்க பாடகரான டெய்லர் ஸ்விப்ட். இவருக்கு ஆண்டு ஒன்றுக்கு 17 கோடி டாலர் சம்பளம் கிடைக்கின்றது. முதல் பத்து இடங்களை இந்த பட்டியலில் இடம்பெற்றவர்கள் குறித்து தற்போது பார்ப்போம்.
1. டெய்லர் ஸ்விட்ப். ஆண்டு சம்பளம். $17 மில்லியன்
2. ஒன் டைரக்ஷன் குழு – $110 மில்லியன்
3. நூலாசிரியர் ஜேம்ஸ் பேட்டர்சன் – $95 மில்லியன்
4. டாக்டர் பில் மெக்ரா – $88 மில்லியன்
5. கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ – $88 மில்லியன்
6.கெவின் ஹார்ட் – $87.5 மில்லியன்
7. ஹவேர்ட் ஸ்டெர்ன் – $85 மில்லியன்
8.லியோனல் மெஸ்ஸி – $81.5 மில்லியன்
9.அடெலி – $80.5 மில்லியன்
10.ரஷ் லிம்பாஹ் – $79 மில்லியன்
பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் 3.30 கோடி டாலர் சம்பளத்துடன் 86-வது இடத்திலும் மற்றொரு பாலிவுட் நடிகரான அக்ஷய் குமார் 3.15 கோடி டாலர் சம்பளத்துடன் 94-வது இடத்திலும் உள்ளனர்.
இந்த பட்டியலில் உள்ள 100 நட்சத்திரங்கள் குறித்த விபரங்களை தெரிந்து கொள்ள http://www.forbes.com/sites/zackomalleygreenburg/2016/07/11/celeb-100-the-worlds-highest-paid-celebrities-of-2016/என்ற லிங்கை சொடுக்கவும்
The World’s Highest Paid stars