எல் அண்ட் டி இன்போடெக் ஐபிஓ 11.67 மடங்குக்கு விண்ணப்பங்கள் குவிந்தன

எல் அண்ட் டி இன்போடெக் ஐபிஓ 11.67 மடங்குக்கு விண்ணப்பங்கள் குவிந்தன

LT-Infotechஎல் அண்ட் டி இன்போடெக் நிறுவனத்தின் பொதுப்பங்கு வெளியீடு (ஐபிஒ) நேற்று முடிந்தது. ரூ.1,243 கோடி திரட்ட இந்த நிறுவனம் திட்டமிட்டிருந்தது. இந்த நிறுவனத்தின் பங்குகளை வாங்குவதற்கு 11.67 மடங்குக்கு விண்ணப்பங்கள் குவிந்தன. இதன் காரணமாக முதல் நாள் வர்த்தகத்தில் ஓரளவுக்கு ஏற்றம் இருக்கும் என வர்த்தகர்கள் நம்பிக்கை தெரிவித்திருக்கின்ற னர். கடந்த திங்கள் கிழமை தொடங் கிய ஐபிஓ நேற்று முடிவுக்கு வந்தது. ஒரு பங்கு விலை ரூ.705-710 என நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. சிறு முதலீட்டாளர்களுக்கு 10 ரூபாய் தள்ளுபடியில் பங்குகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப் பட்டிருந்தது.

இந்தியாவில் செயல்படும் ஆறாவது பெரிய ஐடி நிறுவனம் இதுவாகும். 258 வாடிக்கை யாளர்கள் இந்த நிறுவனத்துக்கு இருக்கின்றனர். கடந்த ஆகஸ்ட் மாதம் இன்ஃபோசிஸ் நிறுவ னத்தை சேர்ந்த சஞ்சய் ஜலோ னாவை நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாக எல் அண்ட் டி நியமனம் செய்தது.

சிறு முதலீட்டாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட பங்குகள் 7.03 மடங்கும், நிறுவன முதலீட்டாளர் களுக்கு ஒதுக்கப்பட்ட பங்குகள் 19.91 மடங்கும், நிறுவன முதலீட் டாளர்கள் அல்லாதவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பங்குகள் 10.76 மடங்கும் பரிந்துரையானது. பல புரோக்கரேஜ் நிறுவனங்கள் எல் அண்ட் டி இன்போடெக் ஐபிஓவுக்கு விண்ணப்பிக்கலாம் என பரிந்துரை செய்திருந்தன. மிகச்சில புரோக்கரேஜ் நிறுவனங் கள் மட்டும் தவிர்க்க வேண்டும் என பரிந்துரை செய்தன.

மந்தமான வர்த்தகம்

தொடர்ந்து இரு தினங்களாக உயர்ந்த இந்திய பங்குச்சந்தைகள் நேற்று ஏற்ற இறக்கத்துடன் முடிவடைந்தன. ஜூன் காலாண்டு முடிவுகள் இன்று முதல் வெளியாக இருப்பதால் பங்குச் சந்தையில் எச்சரிக்கையான சூழல் நிலவுகிறது என பங்குச் சந்தை வல்லுநர்கள் தெரிவித்திருக் கின்றனர். தவிர ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னர் குறித்த அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளி யாகலாம் என்னும் எதிர்பார்ப்பு காரணமாகவும் பங்குச் சந்தையில் ஏற்ற இறக்கமான வர்த்தகம் நிலவியது.

சென்செக்ஸ் 7 புள்ளியிலும் உயர்ந்து 27815 புள்ளியிலும், நிப்டி 1.55 புள்ளிகள் சரிந்து 8519 புள்ளியிலும் முடிவடைந்தது. மெட்டல் துறை குறியீடு 1.83 சதவீதம் உயர்ந்தது. மாறாக ரியால்டி குறியீடு 2.08 சதவீதமும், மின்சார குறியீடு 0.88 சதவீதம் சரிந்தும் முடிவடைந்தது.

சென்செக்ஸ் பட்டியலில் டாடா ஸ்டீல், கெயில், ஓஎன்ஜிசி, கோல் இந்தியா மற்றும் இன்ஃபோசிஸ் ஆகிய பங்குகள் உயர்ந்தும் பவர் கிரிட், லுபின், எல் அண்ட் டி, மாருதி மற்றும் ஏசியன் பெயின்ட்ஸ் ஆகிய பங்குகள் சரிந்தும் முடிவடைந்தன.

பெரும்பாலான வங்கிப்பங்கு கள் சரிந்தன. யெஸ் பேங்க், ஆக்ஸிஸ், இண்டஸ்இந்த் ஆகிய வங்கிப்பங்குகள் சரிந்தன. மண் ணெண்ணெய் விலையை அடுத்த 10 மாதங்களுக்கு 25 பைசா உயர்த்த மத்திய அரசு அனுமதி வழங்கியதால் எண்ணெய் பங்குகள் உயர்ந்து முடிந்தன.

Leave a Reply