மக்கள் கூட்டத்திற்குள் புகுந்த கனரக வாகனம். 80 பேர் பரிதாப பலி. தீவிரவாதிகளின் கைவரிசை

மக்கள் கூட்டத்திற்குள் புகுந்த கனரக வாகனம். 80 பேர் பரிதாப பலி. தீவிரவாதிகளின் கைவரிசை

பிரான்ஸ் நாட்டின் நீஸ் என்ற் நகரத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சாலையில் பாஸ்டில் தினம் என்று கூறப்படும் பிரான்ஸ் தேசிய தினத்தை கொண்டாடி வந்த வேளையில் திடீரென கூட்டத்திற்குள் கனரக வாகனம் ஒன்று புகுந்து சுமார் 2 கிலோமீட்டர் வரை நிற்காமல் சென்றதால் வாகனத்தின் சக்கரங்களில் சிக்கி 80 பேர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதால் பலி எண்ணிக்கை 100ஐ தாண்டும் என அஞ்சப்படுகிறது. இந்த கொடூர செயலை செய்த கனரக வாகனத்தின் டிரைவரை போலீசார் சுட்டு கொன்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த வாகனத்தை ஆய்வு செய்தபோது அதில் ஆயுதங்கள், கையெறி குண்டுகள் இருந்ததாகவும் இது தீவிரவாதிகளின் கைவரிசையாக இருக்க வாய்ப்புள்ளது என்றும் நீஸ் நகர தலைவர் தெரிவித்துள்ளார்.

இந்த விபத்து குறித்த தகவல் அறிந்தவுடன் உடனடியாக ஆம்புலன்ஸ் வாகனங்களும், 2 ஹெலிகாப்டர்களும் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன. ஏராளமான சடலங்கள் சாலையில் சிதறிக் கிடப்பதால் அப்பகுதி மக்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். இந்த தாக்குதலுக்கு பிரான்ஸ் அதிபர், அமெரிக்க அதிபர் ஒபாமா மற்றும் இந்திய பிரதமர் உள்ளிட்ட பலர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Atleast 80 dead as truck plows in crown in France

france 5 france1 france2 france3 france4 france6 france7 france8 france9 france10 france11

Leave a Reply