மது அருந்திய முன்னாள் எம்.எல்.ஏ. சஸ்பெண்ட். பீகார் முதல்வரின் அதிரடி நடவடிக்கை

மது அருந்திய முன்னாள் எம்.எல்.ஏ. சஸ்பெண்ட். பீகார் முதல்வரின் அதிரடி நடவடிக்கை

biharபீகார் மாநிலத்தில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் பூரண மதுவிலக்கு அமலாகியுள்ளது. மதுவிலக்கை மீறி மது அருந்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரித்துள்ளது.

இந்நிலையில் ஆளும் ஐக்கிய ஜனதா கட்சியின் முன்னாள் எம்எல்ஏ லலன் ராம், என்பவர் பீர் அருந்துவது போல் வீடியோ ஒன்று வெளியானதை அடுத்து நேற்று முன்தினம் அவர் கைது செய்யப்பட்டார். அதுமட்டுமின்றி கட்சியில் இருந்தும் அவரை சஸ்பெண்ட் செய்ய முதல்வர் நிதிஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.

மதுவிலக்கை மீறியதாக ஆளும் கட்சியின் நடவடிக்கைக்கு ஆளான 2-வது பிரமுகர் லலன் ராம் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன் இதே குற்றத்துக்காக எம்எல்சி மனோரமா தேவி கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டதோடு கைது செய்யப்பட்டார் என்பது தெரிந்ததே.

Leave a Reply