மக்களின் மகிழ்ச்சிக்கான ஒரு புதிய துறை. மத்தியபிரதேச முதல்வர் அறிவிப்பு

மக்களின் மகிழ்ச்சிக்கான ஒரு புதிய துறை. மத்தியபிரதேச முதல்வர் அறிவிப்பு

MP CMஒரு அரசாங்கத்தில் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய பலவிதமான துறைகள் அமைத்து அதற்கென ஒரு அமைச்சர் நியமனம் செய்யப்படுவது வழக்கம். ஆனால் மக்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்காகவே ஒரு துறை அமைக்கும் யோசனை ஒன்றை மத்திய பிரதேச முதல்வர் கூறியுள்ளார். ஒரு மாநிலத்தின் செழிப்புக்கு, பொருளாதார வளர்ச்சியை மட்டும் போதாது. மக்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பது மிக முக்கியம். எனவே, மக்களின் மகிழ்ச்சிக்கான புதிய துறையை உருவாக்கவுள்ளதாக மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் முடிவு செய்துள்ளார்.

மக்களின் அத்தியாவசிய தேவையான உணவு, உடை, உறைவிடம், கல்வி, சுகாதாரம் ஆகிய அடிப்படைத் தேவைகளையும் தாண்டி மக்களின் தேவைகளும், எதிர்பார்ப்புகளும் நிறைய உள்ளன. வாழ்க்கை மீதான பிடிப்பு, திருப்தி நிலை போன்ற பல அம்சங்கள் உள்ளன. இவை மக்களுக்கு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.

மக்களின் மகிழ்ச்சி நிலையை அதிகப்படுத்துவதற்காக, பல்வேறு துறைகளுடன் இணைந்து, புதிய கொள்கைகளையும், கோட்பாடுகளையும், இப்புதிய துறை ஏற்படுத்தும். இதைச் சார்ந்து, பல் வேறு ஆய்வுகள், பரிசோதனை முயற்சிகள் போன்றவை மேற்கொள்ள இத்துறைக்கு ரூ.3.80 கோடி ஒதுக்கீடு செய்ய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த தகவலை முதல்வர் சிவராஜ்சிங் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

Leave a Reply