அமெரிக்காவில் 17 வயது இளைஞனை திருமணம் செய்த 71 வயது பெண்.
அமெரிக்காவில் உள்ள Tennessee என்ற பகுதியை சேர்ந்த 71 வயது பெண் Almeda Errell என்பவரது மகன் திடீரென சர்க்கரை நோய் காரணமாக திடீரென மரணம் அடைந்துவிட்டார். அவரது மகனின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள வந்த பலர், Almeda Errell அவர்களுக்கு ஆறுதல் கூறி சென்றனர். அவ்வாறு ஆறுதல் கூற 17வயது இளைஞர் Gary Hardwick என்பவர் நாளடைவில் அந்த பெண்ணுக்கு நெருக்கமாகி தற்போது திருமணம் செய்து கொண்டார்.
17 வயது Gary Hardwick ஏற்கனவே காதல் தோல்வி அடைந்தவர் என்று கூறப்படுகிறது. இளைஞனின் காதல் தோல்விக்கு முதிய பெண் ஆறுதல் கூறியதாகவும், முதிய பெண்ணின் மகன் இறந்த சோகத்திற்கு இளைஞர் ஆறுதல் கூறியதாகவும் இருவரும் மாறி மாறி ஆறுதல் கூறியதில் காதல் பிறந்ததாகவும் இருவருக்கும் நெருக்கமானவர்கள் தெரிவித்தனர்.
Almeda Errell அவர்களுக்கு ஒரு பேரன் இருப்பதாகவும், அந்த பேரனின் வயது அவருடைய புதிய கணவரின் வயதைவிட ஒரு வயது அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது மூவரும் ஒரே வீட்டில் வாழ்ந்து வருகின்றனர்.