ஸ்ருதிஹாசனை அடுத்து அஜித்துடன் இணையும் அக்ஷராஹாசன்
தல அஜித் நடிக்கும் 57வது படத்தின் படப்பிடிப்பு பல்கேரியா நாட்டில் வரும் ஆகஸ்ட் முதல் வாரம் தொடங்கவிருப்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. அதேபோல் இந்த படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகளும் லிஸ்ட்டையும் இயக்குனர் சிறுத்தை சிவா தயார் செய்து அவர்களுக்கு பல்கேரிய விசாவும் ஏற்பாடு செய்துவிட்டாராம்.
இந்நிலையில் இந்த விசா லிஸ்ட் மூலம்தாம் இந்த படத்தில் கமல்ஹாசனின் இளையமகள் அக்ஷராஹாசன் நடிப்பது வெளியே தெரிந்துள்ளதாம். இந்த படத்தில் காஜல் அகர்வால் ஹீரோயின் என்றாலும் முக்கிய வேடம் ஒன்றில் அக்ஷரா ஹாசன் நடிப்பதாக கூறப்படுகிறது. அஜித்தின் முந்தைய படமான ‘வேதாளம்’ படத்தில் ஸ்ருதிஹாசன் நாயகியாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த படத்தின் வில்லன் வேடத்தை ஏற்க பிரபல நடிகர்கள் ஒப்புக்கொள்ளாததால் அஜித்தே நடிக்க முடிவு செய்துவிட்டாராம். ‘வரலாறு’ படம் போலவே அஜித் இந்த படத்தில் நாயகன், வில்லன் என்ற இரண்டு கேரக்டர்களிலும் நடிக்கின்றார்.
அனிருத் இசையில் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கும் இந்த படம் வரும் 2017ஆம் ஆண்டு பொங்கல் அல்லது தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.