‘கபாலி’ ரிலீஸ் தினத்தில் விடுமுறை மற்றும் இலவச டிக்கெட். சென்னை நிறுவனம் அசத்தல்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘கபாலி’ திரைப்படம் ஜூலை 22ஆம் தேதி பிரமாண்டமாக உலகம் முழுவதும் வெளியாகவுள்ள நிலையில் அன்றைய தினம் என்ன காரணம் சொல்லி விடுமுறை எடுக்கலாம் என அலுவலக ஊழியர்கள் யோசனை செய்து வருகின்றனர். அன்றைய தினம் தமிழகத்தில் மட்டுமின்றி உலகில் உள்ள அனைத்து முக்கிய நகரங்களில் பணிபுரியும் தமிழர்கள் பலர் தங்கள் அலுவலகங்களில் விடுமுறை எடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் ஊழியர்களுக்கு சிரமம் வைக்காமல் அன்றைய தினம் விடுமுறையை அறிவித்துள்ளது சென்னையை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று. அந்த நிறுவனத்தின் பெயர் FYNDUS என்ற நிறுவனம். இந்த நிறுவனம் நேற்று ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் ஜூலை 22ஆம் தேதி ‘கபாலி’ ரிலீஸ் தினத்தை முன்னிட்டு நிறுவனத்திற்கு விடுமுறை என்று அறிவித்தது மட்டுமின்றி ஊழியர்கள் மகிழ்ச்சியாக ‘கபாலி’ படத்தை பார்க்க டிக்கெட்டையும் ஏற்பாடு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதை போல நம்முடைய நிறுவனமும் அறிவிக்காதா? என்று அனைத்து நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் ஆவலுடன் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏர் ஆசியாவை அடுத்து ‘கபாலி’யில் இணைந்த ஏர்டெல்
சென்னையில் ‘கபாலி’ பிரிமியர் காட்சி இல்லை. தாணு அறிவிப்பு