இனி ஒரு கிராம் கூட தங்கப்பத்திரங்கள் வாங்கலாம்; ஜூலை 18-22ம் தேதி மட்டுமே!

இனி ஒரு கிராம் கூட தங்கப்பத்திரங்கள் வாங்கலாம்; ஜூலை 18-22ம் தேதி மட்டுமே!

goldதங்க பத்திர முதலீட்டை மத்திய அரசு கடந்த ஆண்டு அக்டோபரில் அறிமுகப்படுத்தியது. இந்த நிலையில் 4ம் கட்ட தங்கப் பத்திர வெளியீடு வரும் 18ம் தேதி தொடங்கி 22ம் தேதி வரை நடைபெற உள்ளது.

மத்திய அரசின் சார்பாக தங்கப் பத்திர வெளியீட்டை ரிசர்வ் வங்கி வெளியிடுகிறது. இந்த திட்டத்தின் கீழ் 1, 5, 10, 50 மற்றும் 100 கிராம் தங்க பத்திரங்கள் வாங்க முடியும். இந்த திட்டத்தின் கீழ் ஒரு நிதி ஆண்டில் ஒருவர் அதிகபட்சமாக 500 கிராம் அளவுக்கு தங்க பத்திரங்கள் வாங்கலாம்.

இவற்றின் முதிர்வு காலம் 8 ஆண்டுகள். 5 ஆண்டுகளுக்குப் பிறகு பத்திரங்களை ஒப்படைத்து பணமாக பெறமுடியும். இந்த முதலீட்டுக்கு ஆண்டுக்கு 2.75 சதவிகித வட்டி கிடைக்கும். தங்கப் பத்திரங்கள் வங்கிகள், இந்திய பங்கு விற்பனைக் ஹோல்டிங் கார்ப்பரேஷன் (SHCIL), தபால் அலுவலகங்கள், மும்பை பங்குச் சந்தை மற்றும் தேசிய பங்குச் சந்தையில் கிடைக்கும்.

இதற்கு முந்தைய தங்கப்பத்திரங்கள் விற்பனையில் குறைந்தபட்சமாக 5 கிராம் மட்டுமே வாங்க முடியும் என்ற நிலை இருந்தது. இனி ஒரு கிராமுக்குகூட வாங்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதுவரை மேற்கொள்ளப்பட்ட மூன்று தங்கப் பத்திரங்கள் வெளியீடு மூலம் அரசுக்கு ₹1,322 கோடி கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply