கருப்பு பண விவகாரத்தில் நிறுவனங்களின் சொத்து விவரங்களை சேகரிக்கிறது வரித்துறை
கணக்கில் காட்டப்படாத கருப்பு பணம் பற்றி தகவல் அளிக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக பல்வேறு நிறுவனங்களில் கணக்கில் காட்டப் படாத சொத்துகள் பற்றி விவரங் களை சேகரிக்க வரித்துறை திட்ட மிட்டுள்ளது என தகவல்கள் தெரி விக்கின்றன. மேலும் சட்டவிரோத மாக சொத்துக்களை வைத்திருப் பவர்களை தடுக்கக் கூடிய வகை யில் இந்த தகவல்கள் சேகரிக்கப் படுவதாக தகவல்கள் கூறுகின்றன.
கணக்கில் காட்டப்படாத சொத் துகளை வைத்திருக்கக் கூடிய நிறு வனங்கள் தாமாக முன்வந்து வரு மானங்களை தெரிவிக்கும் திட்டத் தின் (ஐடிஎஸ்) கீழ் விவரங்களை அளிக்கலாம். இதற்கான கால வரையறை செப்டம்பர் 30-ம் தேதியோடு முடிவடைகிறது.
கணக்கில் காட்டப்படாத சொத் துகளை வைத்திருக்கும் நிறுவனங் கள் என்று தெரியவரும் பட்சத் தில் அந்நிறுவனங்களுக்கு இ-மெயில் மூலமாக தகவல் அனுப்ப வருமான வரித்துறை பரிசீலித்து வருகிறது.
அடுத்த மாதத்தில் வருமான வரித்துறையிடமிருந்து கடிதங் கள் நிறுவனங்களுக்கு அனுப்பப் படலாம் என்று தகவல்கள் கூறுகின் றன. மேலும் இது போன்ற நடவடிக் கைகளால் யாரும் பதற்றமடைய தேவையில்லை. இது கணக்கில் காட்டப்படாத சொத்துகளை வைத்திருக்கும் நிறுவனங்கள் மீது மட்டும் எடுக்கப்படும் நடவடிக்கை என்று கூறப்படுகிறது.