ஜெகத்ரட்சகனின் ரெய்டு. கருணாநிதியின் காட்டமான அறிக்கைக்கு உள்நோக்கம் என்ன?
திமுக பிரமுகர் ஜெகத்ரட்சகன் வீட்டில் சமீபத்தில் வருமான வரித்துறையினர் சோதனை செய்தபோது 40 கிலோ தங்கம், 18 கோடி ரூபாய் ரொக்கம் ஆகியவற்றைக் கைப்பற்றி இருக்கிறோம். 450 கோடி ரூபாய்க்கான ஆவணங்களும் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளிவந்தன. ஆனால் வெளிவராத ஒரு தகவல் ஜெகத்ரட்சகனின் முக்கிய தொழில் ஒன்றில் திமுக தலைவர் கருணாநிதியின் குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு தொடர்பு உண்டு என்றும் அதுமட்டுமின்றி நான்கு தொழிபதிபர்கள் ஜெகத்ரட்சகனோடு இணைந்து பல தொழில்களில் ஈடுபட்டுள்ளனர் என்று வருமானவரித்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.
கருணாநிதியின் குடும்ப உறுப்பினர் இதில் சிக்கியுள்ள தகவல் கிடைத்தவுடன் தான் கருணாநிதியிடம் இருந்து காட்டமான அறிக்கை ஒன்று வந்ததாகவும், ஆனால் இந்த அறிக்கை குறித்து பாஜக மேலிடம் கவலைப்படாமல் திமுகவுகு செக் வைக்க முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும் மருத்துவக் கல்லூரி நுழைவுத்தேர்வு விவகாரத்தில் கருணாநிதி காட்டிவரும் எதிர்ப்பையும் தி.மு.க தலைவரின் அறிக்கைப் போரையும் மத்திய அரசு ரசிக்கவில்லை என்றும் எனவே இந்த ரெய்டு நடவடிக்கை மூலம் அவருடைய வாயை அடைக்கலாம் என்று திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.