உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக-தமாக புதிய அணியா?

உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக-தமாக புதிய அணியா?

vijayakanthசமீபத்தில் நடைபெற்ற முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் மக்கள் நலக்கூட்டணியுடன் இணைந்து போட்டியிட்ட தேமுதிக மற்றும் தமாக ஆகிய கட்சிகள் படுதோல்வி அடைந்தது. முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்ட விஜயகாந்த் டெபாசிட் இழந்தார். இந்நிலையில் தோல்விக்கு பின்னர் இரு கட்சிகளும் மக்கள் நலக்கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்டதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. மேலும் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் திமுக கூட்டணியை நோக்கி நெருங்கி வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் வரும் உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக, தமாக தலைமையில் புதிய கூட்டணி அமைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த இரு கட்சிகளும் அதிமுக, திமுகவுடன் கூட்டணி அமைக்க விரும்பவில்லை என்றும் தனி அணியாகவே போட்டியிட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் மக்கள் நலக்கூட்டணியுடன் இணைந்து போட்டியிடுமாறு தேமுதிக, தமாக கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட வாய்ப்பு இருப்பதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். சென்னையில் நேற்று பேட்டியளித்த வைகோ, “சட்டப் பேரவைத் தேர்தலுக்கு பின்னர் தமாகா விலகி, உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடப் போகிறோம் என அறிவித்துவிட்டது. தேமுதிகவும் விலகியதாக முன்னர் அறிவிக்கப்பட்டது. ஆனால், பின்னர் அதை தேமுதிக மறுத்துவிட்டது. இருந்தபோதும், இணைந்து போட்டியிட தேமுதிக, தமாகா கட்சிகளை அழைக்கவும் வாய்ப்பு உள்ளது என்று கூறினார்.

Leave a Reply