துளசி டானிக்கில் உள்ள பயன்கள் என்ன தெரியுமா?

துளசி டானிக்கில் உள்ள பயன்கள் என்ன தெரியுமா?

p76a1தேவையானவை: துளசிச் சாறு – 50 மி.லி, அஸ்வகந்தா (அமுக்கிரா கிழங்கு) – 100 கிராம், நெல்லிக்காய் – 5.

செய்முறை: துளசி இலைகளை மிக்ஸியில் போட்டு அரைத்து, 50 மி.லி அளவுக்குச் சாறு எடுக்கவும். அதேபோல, நெல்லிக்காயை விதை நீக்கி, பொடியாக நறுக்கி, மிக்ஸியில் அரைத்து சாறு எடுக்க வேண்டும். அமுக்கிரா கிழங்கைப் பொடியாக்கிக்கொள்ள வேண்டும். ஒரு டம்ளரில் அமுக்கிரா பொடி, துளசிச் சாறு, நெல்லிச் சாற்றை ஊற்றி, நன்கு கலக்க வேண்டும். இதனை அப்படியே அருந்தலாம்.

துளசியில் உள்ள யூஜெனால் (Eugenol) என்ற ரசாயனம், வைரஸ் கிருமிக்கு எதிராகச் செயல்படக்கூடியது.

அமுக்கிராவில் 150-க்கும் மேற்பட்ட மூலக்கூறுகள், ஊட்டச்சத்துக்கள் உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இது, மூளைக்கு நல்லது. குழந்தைகள் குடித்துவர, நினைவுத்திறன் பெருகும்.

தினமும் நம் உணவில் அமுக்கிரா சேர்த்தால், எந்த நோயும் நம்மை அணுகாது.

குழந்தைகளுக்கு தினமும் அமுக்கிரா கிழங்குப் பொடியைச் சாப்பிடக் கொடுக்கலாம். பால், ஜூஸ் என ஏதாவது ஒன்றில் கலந்து கொடுக்கலாம்.

அமுக்கிராவை `காயகல்ப மருந்து’ எனலாம். நரை, திரை, மூப்பு, பிணியில் இருந்து காக்கும் நெல்லியும் ஒரு காயகல்ப மருந்துதான்.

அடிக்கடி உடல்நலக் குறைவால் பாதிக்கப்படும் குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் சாப்பிடலாம்.

Leave a Reply