பூமிக்கடியில் ஹைட்ரஜன் புதையல். அமெரிக்க பல்கலை மாணவர்கள் கண்டுபிடிப்பு

பூமிக்கடியில் ஹைட்ரஜன் புதையல். அமெரிக்க பல்கலை மாணவர்கள் கண்டுபிடிப்பு

earthபுவித் தகடுகள் அவ்வப்போது நகர்ந்து வருவதால் கடலுக்கடியில் உருவாகும் மலைப் பகுதிகளில் இருந்து அதிக அளவில் ஹைட்ரஜன் வாயு நிறைந்திருக்கலாம் என்று அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.

அமெரிக்காவில் உள்ள டியூக் பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வில் இந்த உண்மை தெரிய வந்துள்ளதாகவும் புதிய வழிமுறைகள் மூலம் இந்த ஹைட்ரஜனை வெளியே எடுக்க முடியும் என்றும் அந்தப் பல்கலைக்கழகளின் ஆய்வு தெளிவாக்கியுள்ளது.

இதுகுறித்து இந்த ஆய்வில் பங்கேற்ற நிபுணர்கள் கூறியதாவது;

புவித் தகடுகள் வேகமாக நகர்வதால் கடலுக்கடியில் உருவாகும் மலைப் பகுதிகளில் எவ்வளவு ஹைட்ரஜன் வாயு உற்பத்தியாகும் என்பதை எங்களது புதிய ஆய்வு முறை மூலம் தெரிந்து கொள்ள முடியும். அந்த முறையைக் கொண்டு ஆய்வு செய்ததில், கண்டங்களுக்கு அடியில் உருவாகும் ஹைட்ரஜன் வாயு அளவைவிட, கடலடியில் பன்மடங்கு அதிகமாக ஹைட்ரஜன் வாயு உருவாகிறது என்பதைக் கண்டறிந்துள்ளோம்.

இதன்மூலம், ஹைட்ரஜன் வாயுவை அதிக அளவில் பெற முடியும் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் பெட்ரோலிய எரிபொருள்களுக்கு ஹைட்ரஜன் வாயு மிகச் சிறந்த மாற்று என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வாயுவை எரித்த பிறகு நீராவி மட்டுமே வெளியேறும்.

எனினும், வாகனங்கள் போன்றவற்றில் ஹைட்ரஜன் வாயுவைப் பரவலாகப் பயன்படுத்தும் அளவில் ஹைட்ரஜன் வாயு கிடைப்பதில்லை. இந்தச் சூழலில், டியூக் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வு, ஹைட்ரஜன் வாயுவை அதிக அளவில் எரிபொருளாகப் பயன்படுத்தி, சுற்றுசூழலைப் பாதுகாக்க முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.

Leave a Reply