ஒரே வருடத்தில் பதவியை இழந்த நேபாள பிரதமர்

ஒரே வருடத்தில் பதவியை இழந்த நேபாள பிரதமர்

nepal pmஇந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான நேபாள நாட்டில் அரச வம்ச ஆட்சியில் இருந்து வெளிவந்து புதிய அரசியல் சட்டம் உருவாக்கப்பட்டு நடைமுறைக்கு கொண்டு வரப்பட்ட பின்னர், அந்நாட்டின் முதல் பிரதமராக கடந்த ஆண்டு பொறுப்பேற்றுக் கொண்ட பிரதமர் கே.பி ஒலி நேற்று மாலை திடீரென தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதனால் நேபாள நாட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பிரதமர் ஒலி தலைமையிலான ஆட்சிக்கு நேபாள மாவோயிஸ்ட்டுகள் தங்கள் ஆதரவை அளித்து வந்த நிலையில் திடீரென நேற்று ஆதரவை விலக்கி கொள்வதாக அறிவித்தது. அதுமட்டுமின்றி சமீப காலமாக அவரது ஆட்சி மீது அதிருப்தி எழுந்து வந்தததாகவும் அவரது ஆட்சி மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்ததாகவும் செய்திகள் கசிந்தன.

இதனையடுத்து நேற்று மாலை பிரதமர் கே.பி ஒலி தனது பதவியை ராஜினாமா செய்தார். அவர் சரியாக 285 நாட்கள் மட்டுமே பிரதமராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. புதிய பிரதமர் யார்? என்பதை தெரிந்து கொள்ள நேபாள மக்கள் பெரும் ஆர்வத்துடன் உள்ளனர்.

Leave a Reply