மான் வேட்டை வழக்கில் இருந்தும் விடுதலை பெற்ற சல்மான்கான்

மான் வேட்டை வழக்கில் இருந்தும் விடுதலை பெற்ற சல்மான்கான்

salmanசமீபத்தில் குடித்துவிட்டு கார் ஓட்டியதாக தொடரப்பட்ட வழக்கில் விடுதலையான பிரபல பாலிவுட் நடிகர் சல்மான்கான் மான் வேட்டையாடிய வழக்கிலும் இன்று விடுதலை செய்யப்பட்டார்.

கடந்த 1998ஆம் ஆண்டு, ராஜஸ்தான் மாநிலத்திற்கு படப்பிடிப்புக்குச் சென்றபோது, சல்மான்கான் அரிய வகை மான்களை வேட்டையாடியதாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் வனவிலங்கு வேட்டையாடுதல் தடை சட்டத்தின் கீழ் அவருக்கு கீழ் நீதிமன்றம் 5 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து அவர் ராஜஸ்தான் ஐகோர்ட்டில் அப்பீல் செய்தார். சல்மான்கானுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைத்த ராஜஸ்தான் ஐகோர்ட் கடந்த சில மாதங்களாக இந்த வழக்கை விசாரணை செய்து வந்தது.

இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளீயானது. கீழ்நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்துசெய்து இன்று உத்தரவு பிறப்பித்த ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் இந்த வழக்கில் இருந்து சல்மான்கானை விடுதலை செய்தது.

Leave a Reply