இந்திய தூதரக அதிகாரிகள் குழந்தைகளை பாகிஸ்தான் பள்ளிகளில் சேர்க்க வேண்டாம். மத்திய அரசு

இந்திய தூதரக அதிகாரிகள் குழந்தைகளை பாகிஸ்தான் பள்ளிகளில் சேர்க்க வேண்டாம். மத்திய அரசு 

india pakistanபாகிஸ்தானில் இந்திய தூதராக பணிபுரிந்து கொண்டிருக்கும் அதிகாரிகள் எந்த காரணத்தை முன்னிட்டும் பாகிஸ்தான் பள்ளிகளில் தங்கள் குழந்தைகளை படிக்க வைக்க வேண்டாம் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்தியாவுக்கு பாகிஸ்தானுக்கும் இடையே நாளுக்கு நாள் மோதல்கள் அதிகரித்து வருவதே இந்த அறிவுறுத்தலுக்கு காரணம் என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

இதுகுறித்து வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் நேற்று டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது”

தூதரகங்கள் அமைந்துள்ள நாடுகளில் நிலவும் சூழல் தொடர்பாகவும், தூதரகக் கொள்கைகள், ஊழியர்கள் நியமனம் ஆகியவற்றை ஆய்வு செய்வது வழக்கமான நடைமுறையாகும்.

அதன்படி, நிகழும் கல்வியாண்டு முதல் இஸ்லாமாபாதில் உள்ள இந்தியத் தூதரகத்தில் பணியாற்றும் அதிகாரிகள் தங்களது குழந்தைகளை பாகிஸ்தானுக்கு வெளியே உள்ள பள்ளிகளில் சேர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மறுஉத்தரவு வரும் வரை இந்த உத்தரவு அமலில் இருக்கும் என்று விகாஸ் ஸ்வரூப் தெரிவித்துள்ளார்.

கடந்த 8ஆம் தேதி ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பைச் சேர்ந்த பர்ஹான் வானி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு பின்னர் இந்திய-பாகிஸ்தான் உறவில் விரிசல் பெரிதாகியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் எரியும் கொள்ளியில் எண்ணெயை ஊற்றியது போல
பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் கண்டனம் “காஷ்மீர் நிச்சயமாக பாகிஸ்தானுடன் என்றாவது இணையும்’ என்று சமீபத்தில் ஆவேசமாக பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply