ரூ.470 கோடிக்கு ஜபாங்கை வாங்கியது மிந்திரா

ரூ.470 கோடிக்கு ஜபாங்கை வாங்கியது மிந்திரா

5மிந்திரா நிறுவனம் ரூ.470 கோடிக்கு ஜபாங் நிறுவனத்தை வாங்கி உள்ளது. இந்த இரண்டு நிறுவனங் களும் பேஷன் பிரிவில் செயல்ப டுவை ஆகும். ஜபாங் நிறுவனம் குளோபல் பேஷன் குரூப் குழு மத்தை சார்ந்தது. கடந்த மார்ச் 31-ம் தேதியுடன் முடிவடைந்த நிதி ஆண்டில் 12.6 கோடி யூரோ வருமானமாக ஜபாங் ஈட்டியுள்ள து. குளோபல் பேஷன் குரூப்பின் வருமானத்தில் ஜபாங்கின் பங்கு 13 சதவீதமாகும்.

ஜபாங்கை விற்கும் முயற்சி கடந்த ஒரு வருடத்துக்கு மேலாக நடந்தது. ஸ்நாப்டீல், பியூச்சர் குரூப், ஆதித்யா பிர்லா குழுமம் மற்றும் அமேசான் ஆகிய நிறு வனங்கள் ஜபாங் நிறுவனத்தை வாங்கும் முயற்சியில் ஈடுபட்டன. ஆனால் இறுதியில் மிந்திரா வாங் கியுள்ளது.

கடந்த 2014-ம் ஆண்டு பிளிப் கார்ட் நிறுவனம் மிந்திராவை வாங்கியது. இந்த இணைப்பின் மதிப்பு ரூ.2,000 கோடி ஆகும். இப்போது ஜபாங் நிறுவனத்தை மிந்த்ரா வாங்கியுள்ளது.

பேஷன் மற்றும் லைப் ஸ்டைல் ஆகியவை இந்திய இ-காமர்ஸ் துறையின் முக்கியமான அம்ச மாகும். இந்த பிரிவில் வளர்ச்சி இருப்பதாக நாங்கள் நம்புகிறோம் என்று பிளிப்கார்ட் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி பின்னி பன்சால் கூறினார்.

மிந்திரா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஆனந்த் நாராயணன் கூறும்போது, இப்போதைக்கு மிந்திரா மற்றும் ஜபாங் ஆகிய நிறுவனங்களை இணைக்கும் திட்டம் இல்லை. ஜபாங் தனது சிறப்பம்சங்களுடன் செயல்படுகிறது. சில குறிப்பிட்ட நகரங்கள் மற்றும் பெண்கள் பிரிவில் ஜபாங் சிறப்பாக செயல்படுகிறது. மாதம் 40 லட்சம் வாடிக்கையாளர்கள் வருகிறார்கள். சர்வதேச பிராண்ட்கள் விற்கப்படு கிறது. இப்போதைக்கு இரு நிறுவ னங்களின் வர்த்தகத்தையும் தனத் தனியே வளர்ப்பதற்கு திட்டமிட் டிருக்கிறோம் என்று கூறினார்.

ஜபாங் நிறுவனம் 2012-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. செப் டம்பர் 2014-ம் ஆண்டு குளோபல் பேஷன் குழுமத்துடன் இணைக் கப்பட்டது. ஸ்வீடனைச் சேர்ந்த கினெவிக் நிறுவனம் குளோபல் பேஷன் குழுமத்தின் பெரும்பான் மையான பங்குகளை வைத்துள் ளது.

ஆன்லைன் பேஷன் துறையில் டாடா கிளிக், ரிலையன்ஸ் அஜியோ, ஆதித்யா பிர்லா குழுமத்தை சேர்ந்த ஏபிஓஎப் ஆகிய நிறுவனங்கள் களம் இறங்கி இருப்பதால் இந்த துறையில் அதிகரிக்கும் போட்டி காரணமாக சந்தையை தக்கவைத்துள்ள ஜபாங் நிறுவனத்தை மிந்திரா வாங்கி இருப்பதாக வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்திய இணையம் மற்றும் மொபைல் சங்கத்தின் கணிப்புப்படி இடெய்ல் துறை ஒவ்வொரு வரு டமும் 57 சதவீதம் உயர்ந்து வரு கிறது. 2015- டிசம்பரில் இடெய்ல் வருமானம் ரூ.37,689 கோடியாக இருந்தது. இந்த வருட டிசம்பரில் ரூ.72,639 கோடியாக உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply